அன்பே பிரதானம்


அன்பே பிரதானம் - சகோதர அன்பே பிரதானம்.

1. பண்புறு ஞானம் - பரம நம்பிக்கை,
இன்ப விஸ்வாசம் - இவைகளிலெல்லாம்

2. பலபல பாஷை – படித்தறிந்தாலும்,
கலகல வென்னும் – கைம்மணியாமே

3. என் பொருள் யாவும் - ஈந்தளித்தாலும்,
அன்பில்லையானால் - அதிற்பயனில்லை

4. துணிவுட னுடலைச் – சுடக்கொடுத்தாலும்,
பணிய அன்பில்லால் – பயனதிலில்லை

5. சாந்தமும் தயவும் – சகல நற்குணமும்
போந்த சத்தியமும் – பொறுமையுமுள்ள

6. புகழிறு மாப்பு - பொழிவு பொறாமை,
பகைய நியாயப் – பாவமுஞ் செய்யா

7. சினமடையாது - தீங்கு முன்னாது,
தினமழியாது - தீமை செய்யாது

8. சகலமுந் தாங்கும் - சகலமும் நம்பும்,
மிகைபட வென்றும் – மேன்மை பெற்றோங்கும்



ஸ்தோத்திரம் இயேசு நாதா


1. ஸ்தோத்திரம் இயேசு நாதா
உமக்கென்றும் ஸ்தோத்திரம் இயேசு நாதா
ஸ்தோத்திரம் செய்கிறோம் நின்னடியார்
திரு நாமத்தின் ஆதரவில்!

2. வான தூதர் சேனைகள்
மனோகர கீதங்களால் எப்போதும்
ஓய்வின்றிப் பாடித் துதிக்கப் பெறும்
மன்னவனே உமக்கு!

3. இத்தனை மகத்துவமுள்ள
பதவி இவ்வேழைகள் எங்களுக்கு
எத்தனை மாதயவு நின் கிருபை
எத்தனை ஆச்சரியம்!

4. நின் உதிரமதினால்
திறந்த நின் ஜீவப் புது வழியாம்
நின் அடியார்க்குப் பிதாவின் சந்நிதி
சேரவுமே சந்ததம்!

5. இன்றைத் தினமதிலும்
ஒருமித்துக்கூட உம் நாமத்தினால்
தந்த நின் கிருபைக்காய் உமக்கென்றும்
ஸ்தோத்திரம், ஸ்தோத்திரமே!

6. நீரல்லால் எங்களுக்குப்
பரலோகில் யாருண்டு ஜீவநாதா
நீரேயன்றி இகத்தில் வேறொரு
தேட்டமில்லை பரனே!



யூத ராஜசிங்கம் உயிர்த்தெழுந்தார்


யூத ராஜசிங்கம் உயிர்த்தெழுந்தார்
உயிர்த்தெழுந்தார், நரகை ஜெயித்தெழுந்தார்

1. வேதாள கணங்கள் ஓடிடவே
ஓடிடவே, உருகி வாடிடவே

2. வானத்தின் சேனைகள் துதித்திடவே
துதித்திடவே, பரனைத் துதித்திடவே

3. மரணத்தின் சங்கிலிகள் தெறிபட்டன
தெறிபட்டன, நொடியில் முறிபட்டன

4. எழுந்தார் என்றதொனி எங்குங் கேட்குதே
எங்குங் கேட்குதே, பயத்தை என்றும் நீக்குதே

5. மாதர் தூதரைக் கண்டகமகிழ்ந்தார்
அகமகிழ்ந்தார், பரனை அவர் புகழ்ந்தார்

6. உயிர்த்த கிறிஸ்து இனி மரிப்பதில்லை
மரிப்பதில்லை, இனி மரிப்பதில்லை

7. கிறிஸ்தோரே நாமவர் பாதம் பணிவோம்
பாதம் பணிவோம், பதத்தைச் சிரமணிவோம்



இணையில்லாதவர் இயேசு


இயேசுவின் நாமம் இனிதான நாமம்
இணையில்லா நாமம், இன்ப நாமம்

1. பாவத்தைப் போக்கும் பயமதை நக்கும்
பரம சந்தோம் பக்தருக்களிக்கும்

2. பரிமளத்தைலமாம் இயேசுவின் நாமம்
பார் எங்கும் வாசனை வசுடும் நாமம்

3. வானிலும் புவிலும் மேலான நாமம்
வானாதி வானவர் இயேசுவின் நாமம்

4. நேற்றும் இன்றும் என்றும் மாறிடா நாமம்
நம்பினோரை என்றும் கைவிடா நாமம்

5. முழங்கால் யாவும் முடக்கிடும் நாமம்
மூன்றில் ஒன்றாக ஜொலிப்பவர் நாமம்

6. சாத்தானின் சேனையை ஜெயித்திட்ட நாமம்
சாபப் பிசாசைத் துரத்திடும் நாமம்



மகிழ்வோம் மகிழ்வோம் தினம் அகமகிழ்வோம்


1. மகிழ்வோம் மகிழ்வோம் தினம் அகமகிழ்வோம்
இயேசு இராஜன் நம் சொந்தமாயினார்
இந்தப் பார்தலத்தின் சொந்தக்காரர் அவர்
எந்தன் உள்ளத்தின் சொந்தமானார்

ஆ ஆனந்தமே பரமானந்தமே
இது மாபெரும் பாக்கியமே - இந்த

2. சின்னஞ்சிறு வயதில் என்னைக் குறித்து விட்டார்
தூரம் போயினும் கண்டுக்கொண்டார்
தமது ஜீவனை எனக்கும் அளித்து
ஜீவன் பெற்றுக்கொள் என்றுரைத்தார்

3. எந்தச் சூழ்நிலையும் அவர் அன்பினின்று
என்னைப் பிரிக்காது காத்துக்கொள்வார்
என்னை நம்பி அவர் தந்த பொறுப்பதனை
அவர் வரும் வரைக் காத்துக் கொள்வேன்

4. அவர் வரும் நாளினில் என்னைக் கரம் அசைத்து
அன்பாய்க் கூப்பிட்டுச் சேர்த்துக்கொள்வார்
அவர் சமூகமதில் அங்கே அவருடனே
ஆடிப்பாடியே மகிழ்ந்திடுவேன்



போற்றித் துதிப்போம் எம் தேவ தேவனை


1. போற்றித் துதிப்போம் எம் தேவ தேவனை
புனித இதயமுடனே
நேற்றும் இன்றும் என்றும் மாறா
இயேசுவை நாமென்றும் பாடித்துதிப்போம்

இயேசு என்னும் நாமமே - என்
ஆத்துமாவின் கீதமே - என் நேசரேசுவை
நான் என்றும் ஏற்றி மகிழ்ந்திடுவேன்

2. கோர பயங்கரமான புயலில்
கொடிய அலையின் மத்தியில்
காக்குங் கரங்கொண்டு மார்பில் சேர்த்தணைத்த
அன்பை என்றும் பாடுவேன்

3. யோர்தான் நதி போன்ற சோதனையிலும்
சோர்ந்தமிழ்ந்து மாளாதே
ஆர்க்கும் ஜெயதொனியோடே
பாதுகாத்த அன்பை என்றும் பாடுவேன்

4. தாய் தன் பாலகனையே மறப்பினும்
நான் மறவேன் என்று சொன்னதால்
தாழ்த்தி என்னையவர் கையில் தந்து
ஜீவ பாதை என்றும் ஓடுவேன்

5. பூமியகிலமும் சாட்சியாகவே
போங்களென்ற கட்டளையதால்
ஆவி ஆத்துமாவும் தேகம் யாவுமின்று
தந்து தொண்டு செய்குவேன



தேசமே பயப்படாதே


தேசமே பயப்படாதே
மகிழ்ந்து களிகூறு
சேனையின் கர்த்தர் உன் நடுவில்
பெரிய காரியம் செய்திடுவார்

1. பலத்தினாலும் அல்லவே
பராக்கிரமும் அல்லவே
ஆவியினாலே ஆகும் என்று
ஆண்டவர் வாக்கு அருளினாரே

2. தாய் மறந்தாலும் மறவாமல்
உள்ளங்கையில் வரைந்தாரே
வலக்கரத்தாலே தாங்கி உன்னை
சகாயம் செய்து உயர்த்திடுவார்

3. கசந்த மாறா மதுரமாகும்
கொடிய யோர்தான் அகன்றிடும்
நித்தமும் உன்னை நல்வழி நடத்தி
ஆத்துமாவை நிதம் தேற்றிடுவார்

4. கிறிஸ்து இயேசு சிந்தையில்
நிலைத்தே என்றும் ஜீவிப்பாய்
ஆவியின் பெலத்தால் அனுதினம் நிறைந்தே
உத்தம சாட்சியாய் விளங்கிடுவாய்

5. மாம்சமான யாவர் மீதும்
உன்னத ஆவியைப் பொழிவாரே
ஆயிரமாயிரம் ஜனங்கள் தருவார்
எழும்பி சேவையும் செய்திடுவார்



வல்லமை தேவை தேவா


வல்லமை தேவை தேவா
வல்லமை தாரும் தேவா
இன்றே தேவை தேவா
இப்போ தாரும் தேவா

பொழிந்திடும் வல்லமை உன்னதத்தின் வல்லமை
ஆவியின் வல்லமை அக்கினியின் வல்லமை

1.மாம்சமான யாவர் மேலும்
ஆவியை ஊற்றுவேன் என்றீர்
மூப்பர் வாலிபர் யாவரும்
தீர்க்க தரிசனம் சொல்வாரே - பொழிந்

2.பெந்தேகோஸ்தே நாளின் போல
பெரிதான முழக்கத்தோடே
வல்லமையாக இறங்கி
வரங்களினாலே நிரப்பும் - பொழிந்

3.மீட்கப்படும் நாளுக்கென்று
முத்திரையான ஆவியைத்தாரும்
பிதாவே என்று அழைக்க
புத்ர சுவிகாரம் ஈந்திடும் - பொழிந்



வருவாய் தருணமிதுவே அழைக்கிறாரே


வருவாய் தருணமிதுவே அழைக்கிறாரே
வல்ல ஆண்டவர் இயேசுவண்டை

1. வாழ்நாளெல்லாம் வீண்நாளாய்
வருத்தத்தோடே கழிப்பது ஏன்
வந்தவர் பாதம் சரணடைந்தால்
வாழ்வித்து உன்னைச் சேர்த்துக்கொள்வார்

2. கட்டின வீடும் நிலம் பொருளும்
கண்டிடும் உற்றார் உறவினரும்
கூடுவிட்டு உன் ஆவி போனால்
கூட உன்னோடு வருவதில்லை

3. அழகும் மாயை நிலைத்திடாதே
அதை நம்பாதே மயக்கிடுமே
மரணம் ஓர் நாள் சந்திக்குமே
மறவாதே உன் ஆண்டவரை

4. வானத்தின் கீழே பூமிமேலே
வானவர் இயேசு நாமம் அல்லால்
இரட்சிப்படைய வழியில்லையே
இரட்சகர் இயேசு வழி அவரே

5. தீராத பாவம் வியாதியையும்
மாறாத உந்தன் பெலவீனமும்
கோரக் குருசில் சுமந்து தீர்த்தார்
காயங்களால் நீ குணமடைய



ராஜா உம் பிரசன்னம் போதுமையா


ராஜா உம் பிரசன்னம் போதுமையா
எப்போதும் எனக்குப் போதுமையா
பிரசன்னம் பிரசன்னம்
தேவ பிரசன்னம்

1 உலகமெல்லாம் மாயையையா
உம் அன்பொன்றே போதுமையா

2. சீர்படுத்தும் சிருஷ்டிகரே
ஸ்திரப்படுத்தும் துணையாளரே

3. பெலப்படுத்தும் போதகரே
நிலைநிறுத்தும் நாயகரே



மெய் ஜோதியாம் நல் மீட்பரே


1. மெய் ஜோதியாம் நல் மீட்பரே,
நீர் தங்கினால் ராவில்லையே;
என் நெஞ்சுக்கும்மை மறைக்கும்
மேகம் வராமல் காத்திடும்.

2. என்றைக்கும் மீட்பர் மார்பிலே,
நான் சாய்வது பேரின்பமே;
என்றாவலாய் நான் ராவிலும்
சிந்தித்துத் தூங்க அருளும்.

3. என்னோடு தங்கும் பகலில்,
சுகியேன் நீர் இராவிடில்;
என்னோடே தங்கும் ராவிலும்
உம்மாலே அஞ்சேன் சாவிலும்.

4. இன்றைக்குத் திவ்விய அழைப்பை
அசட்டை செய்த பாவியை
தள்ளாமல் வல்ல மீட்பரே,
உம்மண்டை சேர்த்துக் கொள்ளுமே.

5. வியாதியஸ்தர், வறியோர்,
ஆதரவற்ற சிறியோர்,
புலம்புவோர் எல்லாரையும்
அன்பாய் விசாரித்தருளும்.

6. பேரன்பின் சாகரத்திலும்
நான் மூழ்கி வாழுமளவும்,
என் ஆயுள்காலம் முழுதும்
உம் அருள் தந்து காத்திடும்.



மூலைக் கல் கிறிஸ்துவே


1. மூலைக் கல் கிறிஸ்துவே
அவர்மேல் கட்டுவோம்
அவர் மெய் பக்தரே
விண்ணில் வசிப்போராம்
அவரின் அன்பை நம்புவோம்,
தயை பேரின்பம் பெறுவோம்

2. எம் ஸ்தோத்ரப் பாடலால்
ஆலயம் முழங்கும்
ஏறிடும் எம் நாவால்
திரியேகர் துதியும்
மா நாமம் மிக்கப் போற்றுவோம்,
ஆனந்தம் ஆர்க்கப் பாடுவோம்

3. கிருபாகரா, இங்கே
தங்கியே கேட்டிடும்
மா ஊக்க ஜெபமே
பக்தியாம் வேண்டலும்
வணங்கும் அனைவோருமே
பெற்றிட ஆசி மாரியே



மான்கள் நீரோடை வாஞ்சித்து


மான்கள் நீரோடை வாஞ்சித்து
கதறும் போல் தேவனே
எந்தன் ஆத்துமா உம்மையே
வாஞ்சித்து கதறுதே

தஞ்சமே நீர் அடைக்கலம் நீர்
கோட்டையும் நீர் என்றும் காப்பீர்

1. தேவன் மேல் ஆத்துமாவே
தாகமாயிருக்கிறதே
தேவனின் சந்நிதியில் நின்றிட
ஆத்துமா வாஞ்சிக்குதே

2.ஆத்துமா கலங்குவதேன்
நேசரை நினைத்திடுவாய்
அன்பரின் இரட்சிப்பினால் தினமும்
துதித்து போற்றிடுவோம்



மாசில்லாத் தேவ புத்திரன்


மாசில்லாத் தேவ புத்திரன்
மானிடனானார், ஜெய! ஜெய! (2)
மாசில்லாத் தேவ புத்திரன்
மானிடனானாரே, ஜெய! ஜெய!
மாசில்லாத் தேவ புத்திரன்
மானிடனானார், ஜெய! ஜெய!

1. ஆசீர்வாதமே! - - - - கன தேசார் நீதமே
ஆசீர்வாதமே! - - - - கன தேசார் நீதமே - - ஒளிர்
குhசினி மீததி நேசப் பி…ரகாச விண் வாச கிருபாசன
- மாசில்லாத்

2. சத்திய வாசகர் - - - - சதா - - நித்திய தேசிகர்
சத்திய வாசகர் - - - - சதா - - நித்திய தேசிகர் - - வளர்
பெத்லகேம் ஊர்தனிலே கரி சித்துக் கன்னி…யாஸ்திரி வித்தினில்
- மாசில்லாத்

3. அந்தரம் பூமியும் - - - - அதி - - சுந்தர நேமியும்
அந்தரம் பூமியும் - - - - அதி - - சுந்தர நேமியும் - - தினம்
ஐந்தொரு நாளினிலே தரு முந்தின மூ...ன்றிலொன்றாகிய
- மாசில்லா



மகிமை உமக்கன்றோ!


மகிமை உமக்கன்றோ! மாட்சிமை உமக்கன்றோ!
துதியும் புகழும் ஸ்தோத்திரமும் தூயவர் உமக்கன்றோ!

ஆராதனை - ஆராதனை
என் அன்பர் இயேசுவுக்கே

1. விலையேறப் பெற்ற உம் இரத்தத்தால்
விடுதலை கொடுத்தீர்,
இராஜாக்களாக லேவியராக
உமக்கென தெரிந்து கொண்டீர்!

2. வழிகாட்டும் தீபம் துணையாளரே
தேற்றும் தெய்வமே,
அன்பால் பெலத்தால்
அனல்மூட்டும் ஐயா அபிஷேக நாதரே!

3. எப்போதும் இருக்கின்ற
இனிமேலும் வருகின்ற எங்கள் ராஜாவே,
உம் நாமம் வாழ்க! உம் அரசு வருக!
உம் சித்தம் நிறைவேறுக!

4. உம் வல்ல செயல்கள்
மிகவும் பெரிய அதிசயமன்றோ!
உம் தூய வழிகள் நேர்மையான
சத்திய தீபமன்றோ!



போற்றிடு ஆன்மமே


1. போற்றிடு ஆன்மமே, சிஷ்டி கர்த்தாவாம் வல்லோரை,
ஏற்றிடு உனக்கு இரட்சிப்பு சுகமானோரை
கூடிடுவோம் பாடிடுவோம் பரனை
மாண்பாய் சபையாரெல்லோரும்

2. போற்றிடு யாவையும் ஞானமாய் ஆளும் பிரானை,
ஆற்றலாய்க் காப்பாரே தம் செட்டை மறைவில் நம்மை.
ஈந்திடுவார் ஈண்டு நாம் வேண்டும் எல்லாம்,
யாவும் அவர் அருள் ஈவாம்

3. போற்றிடு காத்துனை ஆசீர்வதிக்கும் பிரானை,
தேற்றியே தயவால் நிரப்புவார் உன் வாணாளை.
பேரன்பராம் பராபரன் தயவை,
சிந்திப்பாய் இப்போதெப்போதும்.

4. போற்றிடு ஆன்மமே, என் முழு உள்ளமே நீயும்,
ஏற்றிடும் கர்த்தரை ஜீவராசிகள் யாவும்.
சபையாரே, சேர்ந்தென்றும் சொல்லுவீரே,
வணங்கி மகிழ்வாய் ஆமென்.



பொங்கிவரும் அருள் மனிதரை மாற்றிடுதே


பொங்கிவரும் அருள் மனிதரை மாற்றிடுதே
மங்கிப்போன மனம் புதுவாழ்வில் மலர்ந்திடுதே!

1. தீயவர் திருடரும், கொடியவர், கொலைஞரும்
இயேசுவில் மாற்றம் பெற்றார்
மாறிய மனதுடன் மங்கள வாழ்விற்கு
அழைக்கிறார் ஓடியே வா

2. தேவனின் ஆவியால் விடுதலை வாழ்வினைப்
பெற்றவர் பலருமுண்டு
இயேசு மகா இராஜன் உன்னைத்தான் அழைக்கிறார்
நம்பி நீ ஓடியே வா

3. கிருபையின் நாட்களை தயவுடன் ஏற்றிடக்
கனிவுடன் வேண்டுகிறோம்
வருகையின் நாளினில் வருந்திட வேண்டாம் நீ
அழைக்கிறார் - ஓடியே வா.



புதிய பாடல் பாடி பாடி இயேசு


புதிய பாடல் பாடி பாடி இயேசு
ராஜாவைக் கொண்டாடுவோம்
புகழ்ந்து பாடல் பாடி பாடி இயேசு
ராஜாவைக் கொண்டாடுவோம்

1. கழுவினார் இரத்தத்தாலே
சுகம் தந்தார் காயத்தாலே
தேற்றினார் வசனத்தாலே
திடன் தந்தார் ஆவியாலே - எனக்கு

2. உறுதியாய் பற்றிக் கொண்டோம்
உம்மையே நம்பி உள்ளோம்
பூரண சமாதானம்
புவிதனில் தருபவரே - தினமும்

3. அதிசயமானவரே
ஆலோசனைக் கர்த்தரே
வல்லமை உள்ள தேவா
வரங்களின் மன்னவனே - எல்லா

4. கூப்பிட்டேன் பதில் வந்தது
குறைவெல்லாம் நிறைவானது
மகிமையின் ராஜா அவர்
மகத்துவமானவரே - இயேசு

5. மாலையில் அழுகை என்றால்
காலையில் அக்களிப்பு
கோபமோ ஒரு நிமிடம்
கிருபையோ நித்தம் நித்தம் - அவர்



பிதாவே எங்களை கல்வாரியில்


1.பிதாவே எங்களை கல்வாரியில்
நீர் மீட்ட அன்பை நாங்கள் உணர்ந்தே
நரர்க்காய் விண்ணில் உம் சமுகத்தில்
பரிந்து பேசும் கிறிஸ்துவுடனே
ஒரே மெய்யான பலி படைப்போம்
இங்கே அதை உம்முன் பாராட்டுவோம்.

2.ஆ எங்கள் குற்றம் குறை யாவையும்
பாராமல் கிறிஸ்து முகம் நோக்குமே
விஸ்வாஸம் மங்கி ஜெபம் குன்றியும்
உம் பேரருளைப் போக்கடித்தோமே
என்றாலும் எங்கள் பாவம் ஆக்கினை
இடையில் வைத்தோம் மீட்பர் புண்ணியத்தை.

3.இவ்வேளை எங்கள் நண்பர்க்காகவும்
உம் சன்னிதானம் வேண்டல் செய்வோமே
சிறந்த நன்மை யாவும் அளியும்
உம் மார்பினில் அணைத்துக் காருமே
எத்தீங்கும் அனுகாமல் விலக்கும்
உம்மில் நிலைக்க பெலன் அருளும்.

4.இவ்வாறு அண்டினோம் உம் சரணம்
மா சாந்தமுள்ள மீட்பரான நீர்
பேரின்பம் தருந் திவ்விய போஜனம்
கொடுப்பதாலும் தீமை நீக்குவீர்
உற்சாகத்தோடு உம்மை என்றைக்கும்
சேவித்துப் பற்றத் துணை புரியும்.



பாவிக்கு புகலிடம் இயேசு இரட்சகர்


பாவிக்கு புகலிடம் இயேசு இரட்சகர்
பாரினில் பலியாக மாண்டாரே

பரிசுத்தரே பாவமானாரே
பாரமான சிலுவை சுமந்தவரே

1. உலகத்தின் இரட்சகர் இயேசுவே
உயிர் கொடுத்தார் உயிர்த்தெழுந்தார்
தம்மை நம்பினால் உன்னைக் கைவிடார்
தளராமல் நம்பி ஓடிவா

2. பாவ சாபங்கள் தீரா வியாதிகள்
பல தோல்விகள் உந்தன் வாழ்க்கையில்
கண்டு நீ மனம் கலங்குவதேன்
கர்த்தன் இயேசுவண்டை ஓடிவா

3. வருத்தப்பட்டு பாரம் சுமப்போரே
வாருங்கள் என்னண்டையில் என்கிறார்
இளைப்பாறுதல் தரும் இயேசுவை
இன்று தேடி நாடி நம்பி வா

4. காட்டிக் கொடுத்தான் முப்பது வெள்ளிக்
காசுக்காகவே கர்த்தன் இயேசுவை
கொலை செய்யவே கொண்டு போனாரே
கொல் கொதா மலைக்கு இயேசுவை.

5. கள்ளர் மத்தியில் ஒரு கள்ளன் போல்
குற்றமற்ற கிறிஸ்தேசு தொங்கினார்
பரிகாசமும் பசி தாகமும்
படுகாயமும் அடைந்தாரே.

6. கால்கள் கைகளில் ஆணி பாய்ந்திட
கிரீடம் முள்களில் பிண்ணி சூடிட
இரத்த வெள்ளத்தில் கர்த்தர் தொங்கினார்
இதைக் காணும் உள்ளம் தாங்குமோ.



பாரச் சிலுவையினை தோளில் சுமக்கும்


பாரச் சிலுவையினை தோளில் சுமக்கும் அந்தப்
பாதம் என் தெய்வம் அல்லவோ!
தாகமாய் இருக்கிறேன் என்று சொல்லும் அவர்
ஞாபகம் நான் அல்லவோ!
அவர் ஞாபகம் நான் அல்லவோ!

1. ஈராறு சீடருடன் வாழ்ந்த அவருக்கு
இருபக்கம் கள்வர் அல்லவோ!
பாவம் அறியா அவர் பாதத்தில்
பணிந்திடும் பாக்கியம் தந்தாரல்லோ!
சுப பாக்கியம் தந்தாரல்லோ!

2. கண்களில் கண்ணீரால் பார்வையில் ஒளி மங்க
பார்த்திபன் சாவதன்றோ!
தன்னலமாகச் சென்ற பாதகன்
எனை வெல்லப் பொற்பாதம் ஆணி அல்லோ
அவர் பொற்பாதம் ஆணி அல்லோ!

3. கல்வாரி மலையில் நின்றிடும் சிலுவையே
மாபாவி நானும் வந்தேன்!
தொங்கிடும் என் தெய்வம்
தங்கிட என் உள்ளம் தந்திட இதோ வந்தேன்!
நேசர் தங்கிட இதோ வந்தேன்!



பரிசுத்தர் கூட்டம் நடுவில்


பரிசுத்தர் கூட்டம் நடுவில்
ஜொலித்திடும் சுத்த ஜோதியே
அரூபியே இவ்வேளையில்
அடியார் நெஞ்சம் வாரீரோ

1. மீன் கேட்டால் பாம்பை அருள்வார் உண்டோ?
கல் தின்னக் கொடுக்கும் பெற்றோர் உண்டோ?
பொல்லாதோர் கூட செய்திடார்
நற்பிதா நலம் அருள்வார்

2. சுத்தம் விரும்பும் சுத்த ஜோதியே
விரும்பா அசுத்தம் யாவும் போக்குமே
பாவி நீச பாவி நானையா
தேவா இரக்கம் செய்யமாட்டீரோ

3. பாரும் தந்தையே எந்தன் உள்ளத்தை
யாரும் காணா உள் அலங்கோலத்தை
மனம் நொந்து மருளுகின்றேன்
பரிசுத்தம் கெஞ்சுகின்றேன்

4. துணை வேண்டும் தகப்பனே உலகிலே
என்னை எதிர்க்கும் சக்திகள் பல உண்டே
என் ஜீவன் எல்லையெங்கிலும்
பரிசுத்தம் என எழுதும்



பரிசுத்த ஆவியே, வாருமையா


பரிசுத்த ஆவியே, வாருமையா
அபிஷேகத்தால் என்னை நிரப்புமையா
புது எண்ணையால், புது பெலத்தால்
பாத்திரம் நிரம்பி வழியட்டுமே

1.ஆத்தும ஆதாயம் செய்திடவே
அழியும் மக்களை மீட்டிடவே
அனுப்பும் தேவா ஆவியினை உம்
அற்புதம் இன்று விளங்கட்டுமே

2.சிம்சோனுக்கு நீர் இரங்கினீர்
புதிய பெலத்தை கொடுத்தீரே
சோர்ந்து போன ஊழியரே, உன்னை
உயிர்பிக்க செய்யும் அபிஷேகமே

3.உலர்ந்த எலும்புகள் உயிரடைய
உன்னத ஆவியை அனுப்பினீரே
சபைகள் வளர, கால் ஊன்றி நிற்க
எழுப்புதல் இன்று அனுப்பிடுமே



நான் நேசிக்கும் தேவன்


நான் நேசிக்கும் தேவன் இயேசு இன்றும் ஜீவிக்கிறார் - அவர்
நேற்றும் இன்றும் நாளை என்றும் மாறாதவர் (2)
நான் பாடி மகிழ்ந்திடுவேன், என் இயேசுவைத் துதித்திடுவேன்
என் ஜீவிய காலமெல்லாம் அவர் பாதத்தில் அமர்ந்திருப்பேன்

1. கடலாம் துன்பத்தில் தவிக்கும் வேளையில்
படகாய் அவர் வருவார்
இருள் தனிலே பகலவனாய்
துணையாய் ஒளி தருவார்!

2. பாவ நோயாலே வாடும் நேரத்தில்
மருத்துவராகிடுவார்
மயங்கிவிழும் பசிதனிலே
மன்னாவைத் தந்திடுவார்!

3. தூற்றும் மாந்தரின் நடுவில் எந்தனைத்
தேற்றிட வந்திடுவார்
கால் தளரும் வேளையிலே
ஊன்று கோலாகிடுவார்



நான் ஆராதிக்கும் இயேசு நல்லவர்


நான் ஆராதிக்கும் இயேசு நல்லவர்
நம்பிடுவாய் நீ நம்பிடுவாய்

1. கலங்கிபோன நேரத்திலும்
கரம் பிடித்து நடத்துவார்
தம் சிரகாலே உன்னை மூடி
பாதுகாத்து நடத்துவார்

2. பொல்லாத வார்த்தைகள் வந்தனவோ
பொறுமையாக நீ சகித்தாயோ
இயேசுவின் அன்பு தேற்றிடுமே நீ
அவரின் மார்பில் சாய்ந்திடுவாய்

3. மனிதர் உன்னை வெறுத்தாலும்
மாராத இயேசு இருக்கிறார்
தனிமையான நேரத்திலும் உன்
தந்தையாய் வந்து தேற்றிடுவார்



நம் இயேசு நல்லவர்


நம் இயேசு நல்லவர்
ஒரு போதும் கைவிடார்
ஒரு நாளும் விலகிடார்

ஒன்று சேர்ந்து நாம் துதிப்போம்
சாத்தானை மிதிப்போம்
தேசத்தை சுதந்திரிப்போம்

1. அதிசயமானவர்
ஆறுதல் தருகிறார்
சர்வ வல்லவர்
சமாதானம் தருகிறார் - உனக்கு

2. கண்ணீரைக் காண்கிறார்
கதறலைக் கேட்கிறார்
வேதனை அறிகிறார்
விடுதலை தருகிறார் - இன்று

3. எதிர்காலம் நமக்குண்டு
எதற்கும் பயமில்லை
அதிகாரம் கையிலே
ஆளுவோம் நேசத்தை - நாம்

4. நொறுங்குண்ட நெஞ்சமே
நோக்கிடு இயேசுவை
கூப்பிடு உண்மையாய் - இன்று
குறையெல்லாம் நீக்குவார் - உன்

5. நண்பனே கலங்காதே
நம்பிக்கை இழக்காதே
கண்ணீரைத் துடைப்பவர்
கதவண்டை நிற்கிறார்

6. எத்தனை இழப்புகள்
ஏமாற்றம் தோல்விகள்
கர்த்தரோ மாற்றுவார்
கரம் நீட்டித் தேற்றுவார்

7. என் இயேசு வருகிறார்
மேகங்கள் நடுவிலே
மகிமையில் சேர்த்திட
மறுரூபமாக்குவார்



நன்றியால் துதிபாடு - நம் இயேசுவை


நன்றியால் துதிபாடு - நம் இயேசுவை
நாவாலே என்றும் பாடு
வல்லவர் நல்லவர் போதுமானவர்
வார்த்தையில் உண்மையுள்ளவர் - நன்றி

1. எரிகோ மதிலும் முன்னே வந்தாலும்
இயேசு உந்தன் முன்னே செல்கிறார்
கலங்கிடாதே திகைத்திடாதே
துதியினால் இடிந்து விழும்

2. செங்கடல் நம்மைச் சூழ்ந்து கொண்டாலும்
சிலுவையின் நிழலுண்டு
பாடிடுவோம் துதித்திடுவோம்
பாதைகள் கிடைத்துவிடும்

3. கோலியாத் நம்மை எதிர்த்து வந்தாலும்
கொஞ்சமும் பயம் வேண்டாம்
இயேசு என்னும் நாமம் உண்டு
இன்றே ஜெயித்திடுவோம்



தொல்லை கஷ்டங்கள் சூழ்ந்திடும்


1. தொல்லை கஷ்டங்கள் சூழ்ந்திடும் துன்பம் துக்கம் வரும்
இன்பத்தில் துன்பம் நேர்ந்திடும் இருளாய்த் தோன்றும்எங்கும்
சோதனை வரும் வேளையில் சொற்கேட்கும் செவியிலே
பரத்திலிருந்து ஜெயம் வரும்பரன் உன்னைக்காக்கவல்லோர்
காக்கும்வல்ல மீட்பர் உண்டெனக்கு காத்திடுவார் என்றுமே

2. ஐயம் மிருந்ததோர் காலத்தில் ஆவி குறைவால்தான்
மீட்பர் உதிர பெலத்தால் சத்துருவை வென்றேன்
என் பயம் யாவும் நீங்கிற்றே இயேசு கை தூக்கினார்
முற்றும் என்னுள்ளம் மாறிற்று இயேசென்னைக் காக்கவல்லோர்

3. என்ன வந்தாலும் நம்புவேன் என் நேச மீட்பரை
யார் கைவிட்டாலும் பின் செல்வேன் எனது இயேசுவை
அகல ஆழ உயரமாய் எவ்வளவன்பு கூர்ந்தார்
என்ன துன்பங்கள் வந்தாலும் என்னைக் கைவிடமாட்டார்



தேவா பிரசன்னம் தாருமே


தேவா பிரசன்னம் தாருமே
தேடி உம்பாதம் தொழுகிறோம்
இயேசுவே உம் திவ்ய நாமத்தில்
இன்பமுடன் கூடி வந்தோம்

1. வானம் உமது சிங்காசனம்
பூமி உமது பாதஸ்தலம்
பணிந்து குனிந்து தொழுகிறோம்
கனிந்தெம்மைக் கண்பாருமே

2. சாரோனின் ரோஜா லீலி புஷ்பம்
சாந்த சொரூபி என் இயேசுவே
ஆயிரம் பேரிலும் சிறந்தோராம்
ஆண்டவரைத் தொழுகிறோம்

3. கர்த்தர் செய்த உபகாரங்கள்
கணக்குரைத்து எண்ணலாகுமோ
இரட்சிப்பின் பாத்திரம் கையில் ஏந்தி
இரட்சகரைத் தொழுகிறோம்

4. கர்த்தர் சமூகம் ஆனந்தமே
பக்தர் சபையில் பேரின்பமே
கர்த்தர் நாமத்தைக் கொண்டாடுகிறோம்
சுத்தர்கள் போற்றும் தேவனே

5. நூற்றிருபது பேர் நடுவே
தேற்றரவாளனே வந்தீரே
உன்னத ஆவியை ஊற்றிடுமே
மன்னவனே இந்நேரமே

6. எப்போ வருவீர் என் இயேசுவே
ஏங்கி உள்ளம் உம்மைத் தேடுதே
பறந்து விரைந்து தீவிரமே
இறங்கி வாரும் இயேசுவே



தேவப் பிதா எந்தன் மேய்ப்பன் அல்லோ


தேவப் பிதா எந்தன் மேய்ப்பன் அல்லோ
சிறுமை தாழ்ச்சி அடைகிலேனே
ஆவலதாய் எனைப் பைம்புல்மேல்
அவர் மேய்த் தமர் நீர் அருளுகின்றார்

1. ஆத்துமத் தன்னைக் குளிரப்பண்ணி
அடியேன் கால்களை நீதி என்னும்
நேர்த்தியாம் பாதையில் அவர் நிமித்தம்
நிதமும் சுகமாய் நடத்துகின்றார்

2. சாநிழல் பள்ளத் திறங்கிடினும்
சற்றும் தீங்கு கண்டஞ்சேனே
வானபரன் என்னோடிருப்பார்
வளை தடியும் கோலுமே தேற்றும்

3. பகைவர்க் கெதிரே ஒரு பந்தி
பாங்காய் எனக்கென் றேற்படுத்திச்
சுக தயிலம் கொண்டென் தலையைச்
சுபமாய் அபிஷேகம் செய்குவார்

4. ஆயுள் முழுவதும் என் பாத்ரம்
அருளும் நலமுமாய் நிரம்பும்
நேயன் வீட்டினில் சிறப்போடே
நெடுநாள் குடியாய் நிலைத்திருப்பேன



தேவனே உம்மை நான் ஆராதிப்பேன்


தேவனே உம்மை நான் ஆராதிப்பேன்
இயேசுவே உம்மை நான் போற்றுகிறேன்

1. உம் கரம் வல்லமை அறிந்தோர் உம்மை
போற்றுவார் துதிப்பார் - அல்லேலூயா
சுத்தமான தண்ணீர் இரசமானதுவே
அச்செயல் செய்தவர் இன்று உன் இரட்சகர்

2. உம் கரம் காயங்கள் கண்டோர் உம்மை
போற்றுவார் துதிப்பார் - அல்லேலூயா
காணக் கூடாதவர் கல்வாரி தோன்றினார்
ருசித்தோர் கூறுவார் - இயேசுவே ஆண்டவர்

3. உம் கரம் இவ்வேளை உணர்வோர் உம்மை
போற்றுவார் துதிப்பார் - அல்லேலூயா
மாறிடும் உலகில் மாறாதவர் நீரே
உம்மை அறிந்தவர் .. கூறுவார் ஸ்தோத்திரம்



தேன் இனிமையிலும் இயேசுவின் நாமம்


தேன் இனிமையிலும் இயேசுவின் நாமம்
திவ்விய மதுரமாமே - அதைத்
தேடியே நாடி ஓடியே வருவாய், தினமும் நீ மனமே

1. காசினிதனிலே நேசமதாகக்
கஷ்டத்தை உத்தரித்தே - பாவக்
கசடதை அறுத்துச் சாபத்தைத் தொலைத்தார்

2. பாவியை மீட்கத் தாவியே உயிரைத்
தாமே ஈந்தவராம் - பின்னும்
நேமியாம் கருணை நிலைவரமுண்டு
நிதம் துதி மனமே

3. காலையில் பனிபோல் மாயமாய் உலகம்
உபாயமாய் நீங்கிவிடும் - என்றும்
கர்த்தரின் பாதம் நிச்சயம் நம்பு
கருத்தாய் நீ மனமே

4. துன்பத்தில் இன்பம் தொல்லையில் நல்ல
துணைவராம் நேசரிடம் - நீயும்
அன்பதாய்ச் சேர்த்தால் அணைத்துனைக் காப்பார்
ஆசை கொள் நீ மனமே.

5. பூலோகத்தாரும் மேலோகத்தாரும்
புகழ்ந்து போற்று நாமம் - அதைப்
பூண்டுகொண்டால்தான் பொன்னகர் வாழ்வில்
புகுவாய் நீ மனமே



தூய, தூய, தூயா!


1. தூய, தூய, தூயா! சர்வவல்ல நாதா!
தேவரீர்க் கெந்நாளும் சங்கீதம் ஏறுமே
தூய, தூய, தூயா! மூவரான ஏகா!
காருணியரே, தூய திரியேகரே!

2. தூய, தூய, தூயா! அன்பர் சூழ நின்று
தெய்வ ஆசனமுன்னர் தம் கிரீடம் வைப்பரே,
கேருபீம் சேராபீம் தாழ்ந்து போற்றப்பெற்று,
இன்றென்றும் வீற்றாள்வீர், அநாதியே!

3. தூய, தூய, தூயா! ஜோதி பிரகாசா,
பாவக் கண்ணால் உந்தன் மாண்பைக் காண யார் வல்லோர்?
நீரே தூய தூயர், மனோவாக்குக் கெட்டா
மாட்சிமை, தூய்மை, அன்பும் நிறைந்தோர்,

4. தூய, தூய, தூயா! சர்வவல்ல நாதா!
வானம் ப+மி ஆழி உம்மை ஸ்தோத்திரிக்குமே,
தூய, தூய, தூயா! மூவரான ஏகா!
காருணியரே, தூய திரியேகரே!



துதித்துப் பாடிட பாத்திரமே


1. துதித்துப் பாடிட பாத்திரமே
துங்கவன் இயேசுவின் நாமமதே
துதிகளின் மத்தியில் வாசம் செய்யும்
தூயனை நேயமாய் ஸ்தோத்தரிப்போமே

ஆ! அற்புதமே அவர் நடத்துதலே
ஆனந்தமே பரமானந்தமே
நன்றியால் உள்ளமே மிகப் பொங்கிடுதே
நாம் அல்லேலூயா துதி சாற்றிடுவோம்

2. கடந்த நாட்களில் கண்மணிபோல்
கருத்துடன் நம்மைக் காத்தாரே
கர்த்தரையே நம்பி ஜீவித்திட
கிருபையும் ஈந்ததால் ஸ்தோத்தரிப்போமே

3. அக்கினி ஊடாய் நடந்தாலும்
ஆழியில் தண்ணீரைக் கடந்தாலும்
சோதனையோ மிகப் பெருகினாலும்
ஜெயம் நமக்கீந்ததால் ஸ்தோத்தரிப்போமே

4. இந்த வனாந்தர யாத்திரையில்
இன்பராம் இயேசு நம்மோடிருப்பார்
போகையிலும் நம் வருகையிலும்
புகலிடம் ஆனதால் ஸ்தோத்தரிப்போமே

5. வாஞ்சைகள் தீர்த்திட வந்திடுவார்
வாரும் என்றே நாம் அழைத்திடுவோம்
வானத்திலே ஒன்று சேர்ந்திடும் நாள்
விரைந்து நெருங்கிட ஸ்தோத்தரிப்போமே



திருப்பாதம் நம்பி வந்தேன்


திருப்பாதம் நம்பி வந்தேன் கிருபை நிறை இயேசுவே
தமதன்பைக் கண்டடைந்தேன் தேவ சமூகத்திலே

1. இளைப்பாறுதல் தரும் தேவா
களைத்தோரைத் தேற்றிடுமே
சிலுவை நிழல் எந்தன் தஞ்சம்
சுகமாய் அங்கு தங்கிடுவேன்

2. என்னை நோக்கிக் கூப்பிடு என்றீர்
இன்னல் துன்ப நேரத்திலும்
கருத்தாய் விசாரித்து என்றும்
கனிவோடென்னை நோக்கிடுமே

3. மனம் மாற மாந்தன் நீரல்ல
மன வேண்டுதல் கேட்டிடும்
எனதுள்ளம் ஊற்றி ஜெபித்தே
இயேசுவே உம்மை அண்டிடுவேன்

4. என்னைக் கைவிடாதிரும் நாதா
என்ன நிந்தை நேரிடினும்
உமக்காக யாவும் சகிப்பேன்
உமது பெலன் ஈந்திடுமே

5. உம்மை ஊக்கமாய் நோக்கிப் பார்த்தே
உண்மையாய் வெட்கம் அடையேன்
தமது முகப் பிரகாசம்
தினமும் என்னில் வீசிடுதே

6. சத்துரு தலை கவிழ்ந்தோட
நித்தமும் கிரியை செய்திடும்
என்னை தேற்றிடும் அடையாளம்
இயேசுவே இன்று காட்டிடுமே

7. விசுவாசத்தால் பிழைத்தோங்க
வீர பாதை காட்டிடுமே
வளர்ந்து கனி தரும் வாழ்வை
விரும்பி வரம் வேண்டுகிறேன்.



திருக்கரத்தால் தாங்கி என்னை


திருக்கரத்தால் தாங்கி என்னை
திருச்சித்தம் போல் நடத்திடுமே
குயவன் கையில் களிமண் நான்
அனுதினமும் வனைந்திடுமே

1. உம் வசனம் தியானிக்கையில்
இதயமதில் ஆறுதலே
காரிருளில் நடக்கையிலே
தீபமாக வழி நடத்தும்

2. ஆழ்கடலில் அலைகளினால்
அசையும்போது என் படகில்
ஆத்ம நண்பர் இயேசு உண்டே
சேர்ந்திடுவேன் அவர் சமூகம்

3. அவர் நமக்காய் ஜீவன் தந்து
அளித்தனரே பெரிய மீட்பு
கண்களினால் காண்கிறேனே
இன்பக் கானான் தேசமதை



தந்தானைத் துதிப்போமே


தந்தானைத் துதிப்போமே - திருச்
சபையாரே, கவி - பாடிப்பாடி.

விந்தையாய் நமக்கனந்தனந்தமான,
விள்ளற்கரியதோர் நன்மை மிக மிகத் - தந்

1. ஒய்யாரத்துச் சீயோனே - நீயும்
மெய்யாகக் களிகூர்ந்து நேர்ந்து,
ஐயனேசுக்குனின் கையைக் கூப்பித் துதி
செய்குவையே, மகிழ் கொள்ளுவையே, நாமும் - தந்

2. கண்ணாரக் களித்தாயே - நன்மைக்
காட்சியைக் கண்டு ருசித்துப் புசித்து
எண்ணுக்கடங்காத எத்தனையோ நன்மை
இன்னுமுன்மேற் சோனா மாரிபோற் பெய்துமே - தந்

3. சுத்தாங்கத்து நற்சபையே - உனை
முற்றாய்க் கொள்ளவே அலைந்து திரிந்து
சத்துக் குலைந்துனைச் சத்தியாக்கத் தம்மின்
ரத்தத்தைச் சிந்தி எடுத்தே உயிர் வரம் - தந்

4. தூரம் திரிந்த சீயோனே - உனைத்
தூக்கியெடுத்துக் கரத்தினிலேந்தி,
ஆரங்கள் ப+ட்டி அலங்கரித்து நினை
அத்தனை மணவாட்டி யாக்கினது என்னை! - தந்

5. சிங்காரக் கன்னிமாரே, - உம்
அலங்காரக் கும்மி அடித்துப் படித்து,
மங்காத உம் மணவாளன் யேசுதனை
வாழ்த்தி வாழ்த்தி ஏத்திப் பணிந்திடும் - தந



ஜெயம் ஜெயம் நமக்கு


ஜெயம் ஜெயம் ஜெயம் ஜெயம் ஜெயம் நமக்கு
இயேசு இருக்கையில் பயம் எதற்கு

1.மலைகள் விலகினாலும் பர்வதங்கள் பெயர்ந்தாலும்
உன்னை விட்டு விலகாதவர்
உடன்படிக்கையின் தேவன்! வல்லமையின் ராஜா!
அவர் சேனைகளின் கர்த்தர்!

2.அக்கினி இறங்கிடும் அந்தகாரம் அழிந்திடும்
ஆவியின் பெலன் கூடும்
பெலத்தினால் அல்ல பராக்கிரமம் அல்ல
தேவனாலே ஆகும் என் தேவனாலே ஆகும்

3.சாத்தானை ஜெயிக்க சாபத்தை அழிக்க
வல்லமை இறங்கிடுதே
சிலுவையில் இரத்தம் சிந்திய இயேசு
எனக்காய் யுத்தம் செய்குவார் அவர்
எனக்காய் யுத்தம் செய்குவார்



சிலுவை நிழலில் அனுதினம் அடியான்


சிலுவை நிழலில் அனுதினம் அடியான்
சாய்ந்திளைப்பாறிடுவேன் - ஆ! ஆ!

சிலுவையின் அன்பின் மறைவில்
கிருபையின் இனிய நிழலில்
ஆத்தும நேசரின் அருகில்
அடைகிறேன் ஆறுதல் மனதில்

1. பாவப் பாரச் சுமையதால் சோர்ந்தே
தளர்ந்த என் ஜீவியமே – ஆ! ஆ!
சிலுவையண்டை வந்ததினால்
சிறந்த சந்தோஷங் கண்டதினால்
இளைப்படையாது மேலோகம்
ஏகுவேன் பறந்தே வேகம்

2. இன்பம் சுரந்திடும் திருமொழி கேட்டேன்
இன்னல்கள் மறந்திடுவேன் - ஆ! ஆ!
திருமறை இன்னிசை நாதம்
தேனிலு மினிய வேதம்
தருமெனக்கனந்த சந்தோஷம்
தீர்க்குமென் இதயத்தின் தோஷம்

3. எவ்வித கொடிய இடருக்கு மஞ்சேன்
இயேசுவைச் சார்ந்து நிற்பேன் - ஆ! ஆ!
அவனியில் வியாகுலம் வந்தால்
அவரையே நான் அண்டிக்கொண்டால்
அலைமிக மோதிடு மந்நாள்
ஆறுதல் அளிப்பாரே சொன்னால்



சிங்கக்குட்டிகள் பட்டினி கிடக்கும்


சிங்கக்குட்டிகள் பட்டினி கிடக்கும்
ஆண்டவரைத் தேடுவோர்க்கு குறையில்லையே!
குறையில்லையே, குறையில்லையே
ஆண்டவரைத் தேடுவோர்க்கு குறையில்லையே!

1. புல்லுள்ள இடங்களிலே என்னை மேய்க்கின்றார்!
தண்ணீரண்டை கூட்டிச் சென்று தாகம் தீர்க்கின்றார்!

2. எதிரிகள் முன் விருந்தொன்றை ஆயத்தப்படுத்துகிறார்!
என் தலையை எண்ணெயினால் அபிஷேகம் செய்கின்றார்!

3. ஆத்துமாவை தேற்றுகின்றார் ஆவி பொழிகின்றார்!
ஜீவனுள்ள நாட்களெல்லாம் கிருபை என்னைத் தொடரும்!

4. என் தேவன் தம்முடைய மகிமை செல்வத்தினால்
குறைகளையே கிறிஸ்துவுக்குள் நிறைவாக்கி நடத்திடுவார்!



சருவ லோகாதிபா, நமஸ்காரம்!


1. சருவ லோகாதிபா, நமஸ்காரம்!
சருவ சிருஷ்டிகனே, நமஸ்காரம்!
தரை, கடல், உயிர், வான், சகலமும் படைத்த
தயாபர பிதாவே, நமஸ்காரம்!

2. திரு அவதாரா, நமஸ்காரம்!
ஜெகத் திரட்சகனே, நமஸ்காரம்!
தரணியில் மனுடர் உயிர் அடைந்தோங்கத்
தருவினில் மாண்டோர், நமஸ்காரம்!

3. பரிசுத்த ஆவி, நமஸ்காரம்!
பரம சற்குருவே, நமஸ்காரம்!
அரூபியாய் அடியார் அகத்தினில் வசிக்கும்
அரியசித்தே சதா நமஸ்காரம்

4. முத்தொழிலோனே, நமஸ்காரம்!
மூன்றிலொன்றோனே, நமஸ்காரம்!
கர்த்தாதி கர்த்தா, கருணாசமுத்திரா,
நித்திய திரியேகா, நமஸ்காரம்



சந்தோஷம் பொங்குதே


சந்தோஷம் பொங்குதே சந்தோஷம் பொங்குதே
சந்தோஷம் என்னில் பொங்குதே
இயேசு என்னை இரட்சித்தார் முற்றும் என்னை மாற்றினார்
சந்தோஷம் பொங்கிப் பொங்குதே

1. வழி தப்பி நான் திரிந்தேன் பாவப் பழியதைச் சுமந்தலைந்தேன்
அவர் அன்புக் குரலே அழைத்தது என்னையே
அந்த இன்ப நாளில் எந்தன் பாவம் நீங்கிற்றே

2. சத்துரு சோதித்திட தேவ உத்தரவுடன் வருவான்
ஆனால் இயேசு கைவிடார் தானாய் வந்து இரட்சிப்பார்
அந்த நல்ல இயேசு எந்தன் சொந்தமானாரே

3. பாவத்தில் ஜீவிப்பவர் பாதாளத்தில் அழிந்திடுவார்
நானோ பரலோகத்தில் நாளும் பாடல் பாடிடுவேன்
என்னில் வாழும் இயேசுவோடு என்றும் வாழுவேன்



குருசினில் தொங்கியே குருதியும் வடிய


குருசினில் தொங்கியே குருதியும் வடிய,
கொல்கதா மலைதனிலே - நம்
குருவேசு சுவாமி கொடுந்துயர், பாவி,
கொள்ளாய் கண் கொண்டு.

1. சிரசினில் முண்முடி உறுத்திட, அறைந்தே
சிலுவையில் சேர்த்தையோ - தீயர்
திருக்கரங் கால்களில் ஆணிகளடித்தார்
சேனைத் திரள் சூழ.

2. பாதகர் நடுவில் பாவியினேசன்
பாதகன்போல் தொங்க - ய+த
பாதகர் பரிகாசங்கள் பண்ணிப்
படுத்திய கொடுமைதனை

3. சந்திரசூரிய சகல வான் சேனைகள்
சகியாமல் நாணுதையோ! - தேவ
சுந்தர மைந்த னுயிர் விடுகாட்சியால்
துடிக்கா நெஞ்சுண்டோ?



கிறிஸ்துவுக்குள் வாழும் எனக்கு


கிறிஸ்துவுக்குள் வாழும் எனக்கு
எப்போதும் வெற்றி உண்டு 2

1. என்னென்ன துன்பம் வந்தாலும் நான் கலங்கிடவே மாட்டேன்
யார் என்ன சொன்னாலும் நான் சோர்ந்து போகமாட்டேன்

2. என் ராஜா முன்னே செல்கிறார் வெற்றிப் பவனி செல்கிறார்
குருத்தோலை கையில் எடுத்து நான் ஓசன்னா பாடிடுவேன்

3. சாத்தானின் அதிகாரமெல்லாம் என் நேசர் பறித்துக்கொண்டார்
சிலுவையில் அறைந்துவிட்டார் காலாலே மிதித்துவிட்டார்

4. பாவங்கள் போக்கிவிட்டார் சாபங்கள் நீக்கிவிட்டார்
இயேசுவின் தழும்புகளால் சுகமானேன் சுகமானேன்

5. மேகங்கள் நடுவினிலே என்நேசர் வரப்போகிறார்
கரம்பிடித்து அழைத்துச் செல்வார் கண்ணீரெல்லாம் துடைப்பார்



கால் மிதிக்கும் தேசமெல்லாம்


கால் மிதிக்கும் தேசமெல்லாம் - என்
கர்த்தருக்குச் சொந்தமாகும்
கண்பார்க்கும் ப+மியெல்லாம் கல்வாரி கொடி பறக்கும்

1. பறக்கட்டும் பறக்கட்டும்
சிலுவையின் ஜெயக்கொடி - அல்லேலூயா
உயரட்டும் உயரட்டும்
இயேசுவின் திருநாமம் - அல்லேலூயா

2. எழும்பட்டும் எழும்பட்டும்
கிதியோனின் சேனைகள் - அல்லேலூயா
முழங்கட்டும் முழங்கட்டும்
இயேசுதான் வழியென்று - அல்லேலூயா

3. செல்லட்டும் செல்லட்டும்
ஜெபசேனை துதிசேனை - அல்லேலூயா
வெல்லட்டும் வெல்லட்டும்
எதிரியின் எரிகோவை - அல்லேலூயா

4. திறக்கட்டும் திறக்கட்டும்
சுவிசேஷ வாசல்கள் - அல்லேலூயா
வளரட்டும் வளரட்டும்
அபிஷேகத் திருச்சபைகள் - அல்லேலூயா



காக்கும் கரங்கள் உண்டெனக்கு


1. காக்கும் கரங்கள் உண்டெனக்கு
காத்திடுவார் கிருபையாலே
அல்லேலூயா பாடிப்பாடி
அலைகளை நான் தாண்டிடுவேன்

நம்பி வா இயேசுவை!
நம்பி வா இயேசுவை!

2. நிந்தனைகள் போராட்டம் வந்தும்
நீதியின் தேவன் தாங்கினாரே
நேசக்கொடி என் மேல் பறக்க
நேசர் உமக்காய் ஜீவித்திடுவேன்

3. கன்மலைகள் பெயர்க்கும் படியாய்க்
கர்த்தர் என்னைக் கரம் பிடித்தார்
காத்திருந்து பெலன் அடைந்து
கழுகு போல எழும்பிடுவேன்

4. அத்திமரம் துளிர்விடாமல்
ஆட்டுமந்தை முதல் அற்றாலும்
கர்த்தருக்குக் காத்திருப்போர்
வெட்கப்பட்டுப் போவதில்லை



கர்த்தரைத் துதியுங்கள்


கர்த்தரைத் துதியுங்கள்
அவர் கிருபை என்றுமுள்ளது
தேவாதி தேவனை துதியுங்கள்
அவர் கிருபை என்றுமுள்ளது

1. இம்மட்டும் நடத்தினார் துதியுங்கள்
அவர் கிருபை என்றுமுள்ளது - 2
இனிமேலும் நடத்துவார் துதியுங்கள்
அவர் கிருபை என்றுமுள்ளது - 2

2. இம்மட்டும் தாங்கினார் துதியுங்கள்
அவர் கிருபை என்றுமுள்ளது - 2
இனிமேலும் தாங்குவார் துதியுங்கள்
அவர் கிருபை என்றுமுள்ளது - 2

3. இம்மட்டும் பாதுகாத்தார் துதியுங்கள்
அவர் கிருபை என்றுமுள்ளது - 2
இனிமேலும் பாதுகாப்பார் துதியுங்கள்
அவர் கிருபை என்றுமுள்ளது - 2

4. நம்பினால் கைவிடார் துதியுங்கள்
அவர் கிருபை என்றுமுள்ளது - 2
ஜெபித்தால் ஜெயம் உண்டு துதியுங்கள்
அவர் கிருபை என்றுமுள்ளது - 2



ஓசன்னா பாடுவோம், ஏசுவின் தாசரே


ஓசன்னா பாடுவோம், ஏசுவின் தாசரே,
உன்னதத்திலே தாவீது மைந்தனுக்கு ஓசன்னா!

1. முன்னும் பின்னும் சாலேம் நகர் சின்னபாலர் பாடினார்,
அன்றுபோல இன்றும் நாமும் அன்பாய்த்துதி பாடுவோம்

2. சின்ன மறி மீதில்ஏறி, அன்பர் பவனி போனார்
இன்னும் என் அகத்தில் அவர் என்றும் அரசாளுவார்.

3. பாவமதைப் போக்கவும் இப்பாவியைக் கைதூக்கவும்,
பாசமுள்ள ஏசையாப் பவனியாகப் போகிறார்.

4. பாலர்களின் கீதம் கேட்டுப் பாசமாக மகிழ்ந்தார்
ஜாலர் வீணையோடுபாடித் தாளைமுத்தி செய்குவோம்.

5. குருத்தோலை ஞாயிற்றில் நம் குருபாதம் பணிவோம்,
கூடி அருள் பெற்றுநாமும் த்ரியேகரைப் போற்றுவோம்.



என்னை மறவா இயேசுநாதா


என்னை மறவா இயேசுநாதா
உந்தன் தயவால் என்னை நடத்தும்

1. வல்ல ஜீவ வாக்குத்தத்தங்கள்
வரைந்தெனக்காய் தந்ததாலே ஸ்தோத்திரம்
ஆபத்திலே அரும் துணையே
பாதைக்கு நல்ல தீபமதே

2. பயப்படாதே வலக்கரத்தாலே
பாதுகாப்பேன் என்றதாலே ஸ்தோத்திரம்
பாசம் என்மேல் நீர் வைத்ததினால்
பறிக்க இயலாதெவருமென்னை

3. தாய் தன் சேயை மறந்து விட்டாலும்
மறவேன் உன்னை என்றதாலே ஸ்தோத்திரம்
வரைந்தீரன்றோ உம் உள்ளங்கையில்
உன்னதா எந்தன் புகலிடமே

4. உன்னைத் தொடுவோன் என் கண்மணியைத்
தொடுவதாக உரைத்ததாலே ஸ்தோத்திரம்
அக்கினியின் மதிலாக
அன்பரே என்னைக் காத்திடுமே

5. என்னை முற்றும் ஒப்புவித்தேன்
ஏற்று என்றும் நடத்துவீரே ஸ்தோத்திரம்
எப்படியும் உம் வருகையிலே
ஏழை என்னைச் சேர்த்திடும



என்ன என் ஆனந்தம்!


என்ன என் ஆனந்தம்! என்ன என் ஆனந்தம்!
இயம்பலாகாதே
மன்னன் கிறிஸ்து என் பாவத்தை எல்லாம்
மன்னித்து விட்டாரே

1. கூடுவோம் ஆடுவோம் பாடுவோம் நன்றாய்
மகிழ் கொண்டாடுவோம்!
நாடியே நம்மைத் தேடியே வந்த
நாதனைப் போற்றிடுவோம்

2. பாவங்கள், சாபங்கள், கோபங்கள் எல்லாம்
பரிகரித்தாரே
தேவாதி தேவன் என் உள்ளத்தில் வந்து
தேற்றியே விட்டாரே

3. அட்சயன் பட்சமாய் இரட்சிப்பை எங்களுக்கு
அருளினதாலே
நிச்சயம் சுவாமி பற்றியே சாட்சி
பகரவேண்டியதே

4. வெண்ணங்கி பொன்முடி வாத்தியம் மேல்வீட்டில்
ஜெயக்கொடியுடனே
மண்ணுலகில் வந்து விண்ணுலகில் சென்ற
மன்னனைத் ஸ்தோத்தரிப்போம்



என் உயிரான உயிரான உயிரான இயேசு


என் உயிரான உயிரான உயிரான இயேசு
என் உயிரான இயேசு என் உயிரோடு கலந்தீர்
என் உயிரே நான் உம்மைத் துதிப்பேன்

1. உலகமெல்லாம் மறக்குதையா!
உணர்வு எல்லாம் இனிக்குதையா
உம் நாமம் துதிக்கையிலே இயேசையா
உம் அன்பை ருசிக்கையிலே

2. உம் வசனம் எனக்கு உணவாகும்
உடலுக்கெல்லாம் மருந்தாகும்
இரவும் பகலுமையா!
உம் வசனம் தியானிக்கிறேன்

3. உம் திரு நாமம் உலகத்திலே
உயர்ந்த அடைக்கல அரண்தானே
நீதிமான் உமக்குள்ளே ஓடி
சுகமாய் இருப்பேனே



எந்தன் நாவில் புதுப்பாட்டு


எந்தன் நாவில் புதுப்பாட்டு
எந்தன் இயேசு தருகிறார்

ஆனந்தம் கொள்ளுவேன் அவரை நான் பாடுவேன்
உயிருள்ள நாள் வரையில்

1. பாவ இருள் என்னை வந்து சூழ்ந்து கொள்கையில்
தேவனவர் தீபமாய் என்னைத் தேற்றினார்

2. வாதை நோயும் வந்தபோது வேண்டல் கேட்டிட்டார்
பாதை காட்டித்துன்பமெல்லாம் நீக்கி மீட்டிட்டார்

3. சேற்றில் வீழ்ந்த என்னையவர் தூக்கியெடுத்தார்
நாற்றமெல்லாம் ஜீவரத்தம் கொண்டு மாற்றினார்

4. தந்தை தாயும் நண்பருற்றார் யாவுமாகினார்
நிந்தை தாங்கி எங்குமவர் மேன்மை சொல்லுவேன்

5. இவ்வுலகப் பாடு என்னை என்ன செய்திடும்
அவ்வுலக வாழ்வைக் காண காத்திருக்கிறேன



எந்தக் காலத்திலும் எந்த நேரத்திலும்


எந்தக் காலத்திலும் எந்த நேரத்திலும்
நன்றியால் உம்மை நான் துதிப்பேன்
இயேசுவே உம்மை நான் துதிப்பேன் துதிப்பேன்
எந்த வேளையிலும் துதிப்பேன்

1. ஆதியும் நீரே - அந்தமும் நீரே
ஜோதியும் நீரே - என் சொந்தமும் நீரே

2. தாய்தந்தை நீரே - தாதியும் நீரே
தாபரம் நீரே - என் தாரகம் நீரே

3. வாழ்விலும் நீரே - தாழ்விலும் நீரே
வாதையில் நீரே - என் பாதையில் நீரே

4. துன்பநேரத்தில் - இன்பமும் நீரே
இன்னல் வேளையில் - என் மாறிடா நேசர்



எத்தனை நன்மைகள் எனக்குச் செய்தீர்


எத்தனை நன்மைகள் எனக்குச் செய்தீர்
எப்படி நன்றி சொல்வேன் - நான்
நன்றி ராஜா....நன்றி ராஜா

1. தாழ்மையில் இருந்தேன் தயவாய் நினைத்தீர்
தேவனே உம்மை துதிப்பேன்

2. பெலவீனன் என்று தள்ளி விடாமல்
பெலத்தால் இடை கட்டினீர்

3. பாவத்தினாலே மரித்துப்போய் இருந்தேன்
கிருபையால் இரட்சித்தீரே

4. எனக்காக மரித்தீர் எனக்காக உயிர்த்தீர்
எனக்காய் மீண்டும் வருவீர்

5. கரங்களைப் பிடித்து கண்மணி போல
காலமெல்லாம் காத்தீர்

6. பாவங்கள் போக்கி சாபங்கள் நீக்கி
பூரண சுகமாக்கினீர்

7. முள்முடி தாங்கி திரு இரத்தம் சிந்தி
சாத்தானை ஜெயித்து விட்டீர்

8. நீர் செய்த அதிசயம் ஆயிரம் உண்டு
விவரிக்க முடியாதையா



எண்ணில் அடங்கா ஸ்தோத்திரம்


எண்ணில் அடங்கா ஸ்தோத்திரம் - தேவா
என்றென்றும் நான் பாடுவேன்
இந்நாள் வரை என் வாழ்விலே
நீர் செய்த நன்மைக்கே

1. பூமியில் வாழ்கின்ற யாவும் அதின் மேல் உள்ள ஆகாயமும்
வான் தூதர் சேனைகள் யாவும் தேவா உம்மைப் போற்றுதே!

2. சூரிய சந்திரரோடே சகல நட்சத்திரக் கூட்டமும்,
ஆகாய பறவைகள் யாவும் தேவா உம்மைப் போற்றுதே!

3. காட்டினில் வாழ்கின்ற யாவும் கடும் காற்றும் பனித் தூறலும்
நாட்டினில் வாழ்கின்ற யாவும் நாதா உம்மைப் போற்றுதே!

4. பாவ மனுக்குலம் யாவும் தேவா உம் அன்பினை உணர்ந்தே
சிலுவையின் தியாகத்தைக் கண்டு ஓயா துதி பாடுதே!



ஊற்றுத் தண்ணீரே எந்தன் தேவ ஆவியே


ஊற்றுத் தண்ணீரே எந்தன் தேவ ஆவியே
ஜீவநதியே என்னில் பொங்கி பொங்கிவா
ஆசீர்வதியும் என் நேச கர்த்தரே
ஆவியின் வரங்களினால் என்னை நிரப்பும்

1. கன்மலையைப் பிளந்து வனாந்திரத்திலே
கர்த்தாவே உம் ஜனங்களின் தாகம் தீர்த்தீரே
பள்ளத்தாக்கிலும் மலைகளிலும்
தண்ணீர் பாயும் தேசத்தை நீர் வாக்களித்தீரே

2. ஜீவத் தண்ணீராம் எந்தன் நல்ல கர்த்தரே
ஜீவ ஊற்றினால் என்னை நிறைத்திடுமே
கனிதந்திட நான் செழித்தோங்கிட
கர்த்தரின் கரத்தில் நித்தம் கனம் பெற்றிட

3. இரட்சிப்பின் ஊற்றுக்கள் எந்தன் சபைதனிலே
எழும்பிட இந்த வேளை இரங்கிடுமே
ஆத்ம பலமும் பரிசுத்தமும்
ஆவலுடன் பெற்றிடவே வரம் தாருமே

4. திறக்கப்பட்டதாம் ஊற்று சிலுவையிலே
இரட்சகரின் காயங்களில் வெளிப்படுதே
பாவக் கறைகள் முற்றும் நீங்கிட
பரிசுத்த சமூகத்தில் ஜெயம் பெற்றிட



உம்பாதம் பணிந்தேன்


உம்பாதம் பணிந்தேன் எந்நாளும் துதியே
உம்மையன்றி யாரைப் பாடுவேன் - இயேசையா
உந்தன் அன்பு உள்ளம் பொங்குதே!

1. பரிசுத்தமே பரவசமே பரனேசருளே வரம் பொருளே
தேடினதால் கண்டடைந்தேன் பாடிடப் பாடல்கள் ஈந்தளித்தீர்!

2. புது எண்ணெயால் புது பெலத்தால் புதிய கிருபை புதுக்கவியால்
நிரப்பி நிதம் நடத்துகின்றீர் நூதன சாலேமில் சேர்த்திடுவீர்!

3. நெருக்கத்திலே உம்மை அழைத்தேன் நெருங்கி உதவி எனக்களித்தீர்
திசைக்கெட்டெங்கும் அலைந்திடாமல் தீவிரம் வந்தென்னைத் தாங்குகின்றீர்

4. என்முன் செல்லும் உம் சமூகம் எனக்கு அளிக்கும் இளைப்பாறுதல்
உமது கோலும் உம் தடியும் உண்மையாய் என்னையும் தேற்றிடுதே!

5. கனிசெடி நீர் நிலைத்திருக்கும் கொடியாய் அடியேன் படர்ந்திலங்க
கிளை நறுக்கி களைபிடுங்கி கர்த்தரே காத்தென்னைச் சுத்தம் செய்வீர்!

6. என் இதய தெய்வமே நீர் எனது இறைவா! ஆருயிரே
நேசிக்கிறேன் இயேசுவே உம் நேசமுகம் என்று கண்டிடுவேன்!

7. சீருடனே பேருடனே சிறந்து ஜொலிக்கும் கொடுமுடியில்
சீக்கிரமாய் சேர்த்திடுவீர் சீயோனை வாஞ்சித்து நாடுகிறேன



உங்கள் துக்கம் சந்தோஷமாய் மாறும்


உங்கள் துக்கம் சந்தோஷமாய் மாறும்
உங்கள் கவலைகள் கண்ணீர்
எல்லாம் மறைந்து விடும்

கலங்காதே மகனே, கலங்காதே மகளே
என் இயேசு கைவிட மாட்டார்

1. கடந்ததை நினைத்து கலங்காதே
நடந்ததை மறந்துவிடு
கர்த்தர் புதியன செய்திடுவார்
இன்றே நீ காண்பாய்... கலங்கிடவே வேண்டாம்

2. நொறுங்குண்ட இதயம் தேற்றுகிறார்
உடைந்த உள்ளம் தாங்குகிறார்
காயங்கள் அனைத்தையும் கட்டுகிறார்
கண்ணீர் துடைகின்றார் - (உன்)

3. திராணிக்கு மேலாக சோதிக்கப்பட
ஒருநாளும் விட மாட்டார்
தாங்கிடும் பெலன் தருவார்
தப்பி செல்ல வழி செய்வார் - (நீ)

4. நல்லதோர் போராட்டம் போராடுவோம்
விசுவாசம் காத்துக் கொள்வோம்
நீதியின் கிரீடம் நமக்கு உண்டு
நேசர் வருகையில் தந்திடுவார் - நம்

5. மாலையில் மகனே அழுகின்றாயா
காலையில் அக மகிழ்வாய்
நித்திய பேரானந்தம்
நேசரின் சமூகத்திலே

6. அக்கினியின் மேல் நடந்தாலும்
எரிந்து போக மாட்டாய்
ஆறுகளை நீ கடந்தாலும்
மூழ்கி போக மாட்டாய்

7. முழுமையாய் மனம் திரும்பிவிடு
முற்றிலும் வாழ்வை ஒப்புக்கொடு
வேண்டாத அனைத்தையும் விட்டுவிடு
ஆண்டவர் விருப்பம் நிறைவேற்று
எங்கள் துக்கம் சந்தோஷமாய் மாறும்

எங்கள் கவலைகள் கண்ணீர்
எல்லாம் மறைந்துவிடும்
கலங்கிடவே மாட்டோம்
நாங்கள் கலங்கிடவே மாட்டோம்



ஆவியானவரே அன்பின் ஆவியானவரே


ஆவியானவரே அன்பின் ஆவியானவரே
இப்போ வாரும் இறங்கி வாரும்
எங்கள் மத்தியிலே

1. உளையான சேற்றினின்று தூக்கி எடுத்தவரே
பாவம் கழுவி தூய்மையாக்கும் இந்த வேளையிலே

2. பத்மூ தீவினிலே பக்தனைத் தேற்றினீரே
என்னையும் தேற்றி ஆற்ற வாரும் இந்த வேளையிலே

3. சீனாய் மலையினிலே இறங்கி வந்தவரே
ஆத்ம தாகம் தீர்க்க வாரும் இந்த வேளையிலே

4. நேசரின் மார்பினிலே இனிதாய் சாய்ந்திடவே
ஏக்க முற்றேன் விரும்பி வந்தேன் உந்தன் பாதத்திலே

5. ஆவியின் வரங்களினால் என்னையும் நிரப்பிடுமே
எழுந்து ஜொலிக்க எண்ணெய் ஊற்றும் இந்த வேளையிலே



ஆராதிப்பேன் நான் ஆராதிப்பேன்


ஆராதிப்பேன் நான் ஆராதிப்பேன்
ஆண்டவர் இயேசுவை ஆராதிப்பேன்

1. வல்லவரே உம்மை ஆராதிப்பேன்
நல்லவரே உம்மை ஆராதிப்பேன்

2. பரிசுத்த உள்ளத்தோடு ஆராதிப்பேன்
பணிந்து குனிந்து ஆராதிப்பேன்

3. ஆவியிலே உம்மை ஆராதிப்பேன்
உண்மையிலே உம்மை ஆராதிப்பேன்

4. தூதர்களோடு ஆராதிப்பேன்
ஸ்தோத்திர பலியோடு ஆராதிப்பேன்

5. காண்பவரை நான் ஆராதிப்பேன்
காப்பவரை நான் ஆராதிப்பேன்

6. வெண்ணாடை அணிந்து ஆராதிப்பேன்
குருத்தோலை ஏந்தி ஆராதிப்பேன்



ஆத்துமமே, என் முழு உள்ளமே


ஆத்துமமே, என் முழு உள்ளமே - உன்
ஆண்டவரை தொழுதேத்து, இந்நாள்வரை
அன்பு வைத்தாதரித்த - உன்
ஆண்டவரைத் தொழுதேத்து

1. போற்றிடும் வானோர், ப+தலத்துள்ளோர்
சாற்றுதற்கரிய தன்மையுள்ள

2. தலைமுறை தலைமுறை தாங்கும் விநோத
உலகமுன் தோன்றி ஒழியாத

3. தினம் தினம் உலகில் நீ செய் பலவான
வினை பொறுத்தருளும், மேலான

4. வாதை, நோய், துன்பம் மாற்றி, அனந்த
ஓதரும் தலைசெய் துயிர்தந்த

5. உற்றுனக் கிரங்கி உரிமை பாராட்டும்,
முற்றும் கிருபையினால் முடிசூட்டும்

6. துதி மிகுந்தேற தோத்திரி தினமே
இதயமே, உள்ளமே, என் மனமே