ஸ்தோத்திர பலி


ஸ்தோத்திர பலி ஸ்தோத்திர பலி அப்பாவுக்கு
துதியும் கனமும் மகிமையும் என் அப்பாவுக்கு

1. சுகம் தந்தரே நன்றி ஐயா
பெலன் தந்தரே நன்றி ஐயா

2. உணவு தந்தர் நன்றி ஐயா
உடையும் தந்தர் நன்றி ஐயா

3. அன்பு கூர்ந்தர் நன்றி ஐயா
அரவணைத்தர் நன்றி ஐயா

4. கூட வைத்தர் நன்றி ஐயா
பாட வைத்தர் நன்றி ஐயா

5. அபிகேித்தர் நன்றி ஐயா
அனலாக்கினர் நன்றி ஐயா

6. இரத்தம் சிந்தினர் நன்றி ஐயா
இரட்சிப்பு தந்தர் நன்றி ஐயா



வைகறையில்


வைகறையில் (காலைநேரம்) உமக்காக
வழிமேல் விழிவைத்து
காத்திருக்கின்றேன் இறைவா
என் ஜெபம் கேட்டு பதில் தாரும்
பெருமூச்சைப் பார்த்து மனம் இரங்கும்

1. உம் இல்லம் வந்தேன் உம் கிருபையினால்
பயபக்தியோடு பணிந்து கொண்டேன்
நிறைவான மகிழ்ச்சி உம் சமூகத்தில்
குறையில்லாத பேரின்பம் உம் பாதத்தில்

2. ஆட்சி செய்யும் ஆளுநர் நீர்தானய்யா
உம்மையன்றி வேறு ஒரு செல்வம் இல்லையே
நீர்தானே எனது உரிமைச் சொத்து
எனக்குரிய பங்கும் நீர்தானய்யா

3. படுகுழியில் பாதாளத்தில் விடமாட்டீர்
அழிந்துபோக அனுமதியும் தரமாட்டீர்
என் இதயம் பூரித்து துள்ளுகின்றது
என் உடலும் பாதுகாப்பில் இளைப்பாறுது

4. காலைதோறும் திருப்தியாக்கும் உம் கிருபையால்
நாளெல்லாம் களிகூர்ந்து மகிழ்ந்திருப்பேன்
எப்போதும் என்முன்னே நீர்தானய்யா
ஒருபோதும் அசைவுற விடமாட்டீர்



உம்மைத் தவிர


வேறு ஒரு ஆசை இல்ல இயேசு ராஜா
உம்மைத் தவிர உம்மைத் தவிர

1. உம் பாதம் பணிந்து நான்
உம்மையே தழுவினேன்

2. இருள் நக்கும் வெளிச்சமே
எனை காக்கும் தெய்வமே

3. மனம் இரங்கினரே
மறுவாழ்வு தந்தரே

4. சுகம் தந்தரையா
பெலன் தந்தரையா

5. இரக்கத்தின் சிகரமே
இதயத்தின் தபமே

6. செய்த நன்மை நினைத்து
துதித்துப் பாடி மகிழ்வேன்



வெற்றிக்கொடி பிடித்திடுவோம்


வெற்றிக்கொடி பிடித்திடுவோம் - நாம்
வரநடை நடந்திடுவோம்

1. வெள்ளம்போல சாத்தான் வந்தாலும்
ஆவிதாமே கொடி பிடிப்பார்
அஞ்சாதே என் மகனே
நீ அஞ்சாதே என் மகளே

2. ஆயிரம்தான் துன்பம் வந்தாலும்
அணுகாது அணுகாது
ஆவியின் பட்டயம் உண்டு - நாம்
ஆலகையை வென்று விட்டோம்

3. காடானாலும் மேடானாலும்
கர்த்தருக்கு பின் நடப்போம்
கலப்பையில் கை வைத்திட்டோம்
நாம் திரும்பி பார்க்க மாட்டோம்

4. கோலியாத்தை முறியடிப்போம்
இயேசுவின் நாமத்தினால்
விசுவாச கேடயத்தினால்
பிசாசை வென்றிடுவோம்



விழுகுது விழுகுது எரிகோ கோட்டை


விழுகுது விழுகுது எரிகோ கோட்டை - அல்லேலுயா
எழும்புது எழும்புது இயேசுவின் படை - துநளரள (2)
துதிப்போம் சாத்தானை ஜெயிப்போம்
துதிப்போம் தேசத்தை சொந்தமாக்குவோம் (2)

1. யோசுவாவின் சந்ததி நாமே
தேசத்தை சுதந்தரிப்போமே (2)
உடன்படிக்கைப் பெட்டி நம்மோடு
ஊர் ஊராய் வலம் வருவோமே (2)

2. கால் மிதிக்கும் எவ்விடத்தையும்
கர்த்தர் தந்திடுவாரே (2)
எதிர்த்து நிற்க எவராலுமே
முடியாது என்று வாக்குரைத்தாரே

3. மோசேயோடு இருந்தது போல
சேனைகளின் கர்த்தர் நம்மோடு
தளபதியாய் முன் செல்கிறார்
தளர்ந்திடாமல் பின் தொடர்வோம்

4. அச்சமின்றி துணிந்து செல்வோமே
அறிக்கை செய்து ஆர்ப்பரிப்போமே
கர்த்தர் வார்த்தை நம் வாயிலே
நிச்சயமாய் வெற்றி பெறுவோம்

5. தேசத்து எதிரிகளெல்லாம்
திகில் பிடித்து நடுங்குகின்றனர்
கர்த்தர் செய்யும் அற்புதங்களை
கேள்விப்பட்டு கலங்குகின்றனர்

6. செங்கடலை வற்றச் செய்தவர்
சக்கிரத்தில் வெற்றி தருவார்
யோர்தானை நிற்கச் செய்தவர் - நம்
பாரதத்தை ஆளுகை செய்வார்



விண்ணிலும் மண்ணிலும்


விண்ணிலும் மண்ணிலும் உம்மைத்தவிர
எனக்கு யாருண்டு? இந்த
மண்ணுலகில் உம்மையன்றி வேற
விருப்பம் எதுவுண்டு?

நீர்தானே என் வாஞ்சையெல்லாம்
உம்மைத்தானே பற்றிக் கொண்டேன்

1. உம்மோடு தான் எப்போதும் நான் வாழ்கிறேன்
அப்பா என் வலக்கரம் பிடித்து தாங்குகிறர்
நன்றி ஐயா, நாள் முழுதும்
நல்லவரே, வல்லவரே

2. உம் சித்தம் போல் என்னை நர் நடத்துகிறர்
முடிவிலே என்னை மகிமையில் ஏற்றுக்கொள்வர்

3. என் உள்ளத்தின் பெலனே நீர்தானய்யா......
எனக்குரிய பங்கும் என்றென்றும் நீர்தானய்யா

4. உம்மைத்தானே நான் அடைக்கலமாய் கொண்டுள்ளேன்
உம்மோடுதான் வாழ்வது என் பாக்கியம்

5. எனக்குள்ளே நீர், செயலாற்றி, மகிழ்கின்றர்
உம் சித்தம் செய்ய, ஆற்றல் தருகின்றர்



விண்ணப்பத்தைப் கேட்பவரே


விண்ணப்பத்தைப் கேட்பவரே - என்
கண்ணரைக் காண்பவரே
சுகம் தருபவரே ஸ்தோத்திரம் இயேசையா

1. உம்மால் கூடும் எல்லாம் கூடும்
ஒரு வார்த்தை சொன்னால் போதும்

2. மனதுருகி கரம் நட்டி
அதிசயம் செய்பவரே

3. சித்தம் உண்டு சுத்தமாகு
என்று சொல்லி சுகமாக்கினர்

4. என் நோய்களை சிலுவையிலே
சுமந்து தர்த்தரைய்யா

5. குருடப்களை பார்க்கச் செய்தர்
முடவர்கள் நடக்கச் செய்தர்

6. உம் காயத்தால் சுகமானேன்
ஒரு கோடி ஸ்தோத்திரமே



விடுதலை எனக்கு


விடுதலை விடுதலை விடுதலை எனக்கு
விடுதலை விடுதலை விடுதலை

1. நோயிலிருந்து விடுதலை
பேயிலிருந்து விடுதலை - உனக்கு

2. பாவத்திலிருந்து விடுதலை
சாபத்திலிருந்து விடுதலை - நமக்கு

3. ஆவியினால் விடுதலை
இரத்தத்தினால் விடுதலை - எப்போதும்

4. வார்த்தையினால் விடுதலை
துதியினாலே விடுதலை - எப்போதும்

5. கவலையிலிருந்து விடுதலை
கண்ணரிலிருந்து விடுதலை - உனக்கு



விடுதலை நாயகன் வெற்றியைத் தருகிறார்


விடுதலை நாயகன் வெற்றியைத் தருகிறார்
எனக்குள்ளே இருக்கிறார் என்னே ஆனந்தம்

1. நான் பாடிப்பாடி மகிழ்வேன் - தினம்
ஆடி ஆடித்துதிப்பேன் - எங்கும்
ஓடி ஓடி சொல்லுவேன்
என் இயேசு ஜவிக்கிறார்

2. அவர் தேடி ஓடி வந்தார்
என்னைத் தேற்றி அணைத்துக் கொண்டார்
என் பாவம் அனைத்தும் மன்னித்தார்
புது மனிதனாக மாற்றினார்

3. அவர் அன்பின் அபிகேத்தால்
என்னை நிரப்பி நடத்துகின்றார்
சாத்தானின் வலிமை வெல்ல
அதிகாரம் எனக்குத் தந்தார்

4. செங்கலைக் கடந்து செல்வேன்
யோர்தானை மிதித்து நடப்பேன்
எரிகோவை சுற்றி வருவேன்
எக்காளம் ஊதி ஜெயிப்பேன்



விசுவாசத்தினால் நீதிமான் பிழைப்பான்


விசுவாசத்தினால் நீதிமான் பிழைப்பான்
விசுவாசியே பதறாதே
கலங்காதே திகையாதே விசுவாசியே
கல்வாரி நாயகன் கைவிடாரே

1. தந்தை தாயென்னை வெறுத்திட்டாலும்
பந்த பாசங்கள் அறுந்திட்டாலும்
நிந்தை தாங்கிட்ட தேவன் நம்மை
சொந்த கரங்களால் அணைத்துக் கொள்வார்

2. பிறர் வசை கூறி துன்புறுத்தி
இல்லாதது சொல்லும்போது
நீ மகிழ்ந்து களி கூரு
விண் கைமாறுமிகுதியாகும்

3. கொடும் வறுமையின் உழன்றாலும்
கடும் பசியினில் வாடினாலும்
அன்று எலியாவை பேரித்தவர்
இன்று உன் பசி ஆற்றிடாரோ



வாழ்நாளெல்லாம் களிகூர்ந்து மகிழும்படி


வாழ்நாளெல்லாம் களிகூர்ந்து மகிழும்படி
திருப்தியாக்கும் உம் கிருபையினால்

காலைதோறும் களிகூர்ந்து மகிழும்படி
திருப்தியாக்கும் உம் கிருபையினால்

1. புகலிடம் நீரே பூமியிலே
அடைக்கலம் நீரே தலைமுறை தோறும் (2)
நல்லவரே வல்லவரே
நன்றி ஐயா நாள் முழுதும்
வாழ்நாளெல்லாம்...

2. உலகமும் புமியும் தோன்று முன்னே
என்றென்றும் இருக்கின்ற என் தெய்வமே (2)
நல்லவரே வல்லவரே...
காலைதோறும்...

3. துன்பத்தைக் கண்ட நாட்களுக்கு
ஈடாக என்னை மகிழச் செய்யும் (2)
நல்லவரே வல்லவரே...
வாழ்நாளெல்லாம்...

4. அற்புத செயல்கள் காணச் செய்யும்
மகிமை மாட்சிமை விளங்கச் செய்யும்

5. செய்யும் செயல்களை செம்மைப் படுத்தும்
செயல்கள் அனைத்திலும் வெற்றி தாரும்

6. நாட்களை எண்ணும் அறிவைத் தாரும்
ஞானம் நிறைந்த அறிவைத் தாரும்

7. ஆயுள் நாட்கள் எழுபது தான்
வலிமை மிகுந்தோர்க்கு எண்பது தான்

8. ஆயிரம் ஆண்டுகள் உம் பார்வையில்
கடந்து போன ஓர் நாள் போல



வாழ்த்துகிறோம் வணங்குகிறோம்


வாழ்த்துகிறோம் வணங்குகிறோம்
போற்றுகிறோம் தேவா...ஆ...ஆ...ஆ...

1. இலவலசமாய் கிருபையினால்
நதிமானாக்கி விட்டீர் - ஐயா

2. ஆவியினால் வார்த்தையினால்
மறுபடி பிறக்கச் செய்தர் - என்னை

3. உம் இரத்தத்தால் தெளிக்கப்பட்டோம்
ஒப்புரவாக்கப்பட்டோம் - ஐயா

4. உம்மை நோக்கிப் பார்க்கின்றோம்
பிரகாசம் அடைகின்றோம் - ஐயா

5. அற்புதமே அதிசயமேத
ஆலோசனைக் கர்த்தரே - என்றும்

6. உம்மையன்றி யாரிடம் செல்வோம்
ஜவனுள்ள வார்த்தை நீரே - ஐயா



வாதை உந்தன் கூடாரத்தை அணுகாது


வாதை உந்தன் கூடாரத்தை அணுகாது மகனே
பொல்லாப்பு நேரிடாது நேரிடாது மகளே (2)

1. உன்னதமான கர்த்தரையே
உறைவிடமாக்கிக் கொண்டாய்
அடைக்கலமாம் ஆண்டவனை
ஆதாயமாக்கிக் கொண்டாய்

2. ஆட்டுக்குட்டி இரத்தத்தினால்
சாத்தானை ஜெயித்து விடடோம்
ஆவி உண்டு வசனம் உண்டு
அன்றாடம் வெற்றி உண்டு

3. கர்த்தருக்குள் நம்பாடுகள்
ஒரு நாளும் வணாகாது
அசையாமல் உறுதியுடன்
அதிகமாய் செயல்படுவோம்

4. அழைத்தவரோ உண்மையுள்ளவர்
பரிசுத்தமாக்கிடுவார்
ஆவி ஆத்துமா சாரமெல்லாம்
குற்றமின்றி காத்திடுவார்

5. நம்முடைய குடியிருப்பு
பரலோகத்தில் உண்டு
வரப்போகும் இரட்சகரை
எதிர்நோக்கி காத்திருப்போம்

6. அற்பமான் ஆரம்பத்தை
அசட்டை பண்ணாதே
தொடங்கினவர் முடித்திடுவார்
சொன்னதை செய்திடுவார்

7. ஆற்றல் அல்ல சத்தி அல்ல
ஆவியினால் ஆகும்
சோர்ந்திடாமல் நன்மை செய்வோம்
துணையாளர் முன் செல்கிறார்



வல்லவர் சர்வ வல்லவர்


வல்லவர் சர்வ வல்லவர்
நல்லவர் எப்போதும் நல்லவர்
எல்டாய் அல்லேலுயா

ஆகாதது எதுவுமில்ல
உம்மால் ஆகாதது எதுவுமில்ல
அகிலம் அனைத்தையும் உண்டாக்கி ஆளுகின்றர்

1. துதி செய்யத் தொடங்கியதும்
எதிரிகள் தங்களுக்குள்
வெட்டுண்டு மடியச் செய்தர் (2)
உம்மால் ஆகும் எல்லாம் ஆகும்

2. அலங்கார வாசலிலே
அலங்கோல முடவன் அன்று
நடந்தானே இயேசு நாமத்தில் (2)

3. கோலும் கையுமாக
பிழைக்கச் சென்றார் யாக்கோபு
பெருகச் செய்தர் பெரும் கூட்டமாய்

4. கண்ணரைக் கண்டதாலே
கல்லறைக்குச் சென்றவனை
கரம் பிடித்து துக்கி விட்டீர்

5. ஈசாக்கு ஜெபித்ததாலே
ரெபேக்காள் கருவுற்று
இரட்டையர்கள் பெற்றெடுத்தாள்

6. எலியாவின் வார்த்தையாலே
சாறிபாத் விதவை வட்டில்
எண்ணெய் மாவு குறையவில்லையே

7. ஜெப வரன் தானியேலை
சிங்கங்களின் குகையினிலே
சேதமின்றிக் காப்பாற்றினர்

8. கானாவுுரில் வார்த்தை சொல்ல
கப்பர்நகூம் சிறுவனங்கே
சுகமானான் அந்நேரமே

9. தண்ணரால் ஜாடிகளை கழ்படிந்து நிரப்பினதால்
திராட்சை ரசம் வந்ததையா



வற்றாத நரூற்று போலிருப்பாய்


வற்றாத நரூற்று போலிருப்பாய்
வளமிக்க தோட்டத்தைப் போலிருப்பாய்
கர்த்தரை நம்பி வாழ்ந்திருப்பாய்
காலமெல்லாம் நீ செழித்திருப்பாய்

1. வாழ்க்கால்கள் ஓரம்
நடப்பட்ட மரமாய்
எப்போதும் கனி கொடுப்பாய்
தப்பாமல் கனி கொடுப்பாய்

2. ஓடும் நதி நீ
பாயும் இடத்தில்
உயிரெல்லாம் பிழைத்திடுமே
சுகமாக வாழ்ந்திடுமே

3. பலநாட்டு மக்கள்
உன் நிழல் கண்டு
ஓடி வருவார்கள்
பாடி மகிழ்வார்கள்

4. பஞ்ச காலத்தில்
உன் ஆத்துமாவை
திருப்தியாக்கிடுவார்
தினமும் நடத்திடுவார்

5. கோடைக் காலத்தில்
வறட்சிக் காலத்தில்
அச்சமின்றி இருப்பாய் - நீ
ஆறுதலாய் இருப்பாய்



வல்லமமையின் ஆவியானவர்


வல்லமமையின் ஆவியானவர்
என்னுள் வந்துவிட்டகாரணத்தினால்
பொல்லாத சாத்தானை - ஒரு
சொல்லாலே விரட்டி விட்டேன்

1. பவர் ஆவி எனக்குள்ளே
பய ஆவி அணுகுவதில்லை
அன்பின் ஆவி எனக்குள்ளே
அகற்றிவிட்டேன் கசப்புகளை

2. கட்டுப்பாட்டின் ஆவியானவர்
என்னை ஊழவெசழட பண்ணி நடத்துகிறார்
இ்டம் போல அலைவதில்லை
அவர் சித்தம் செய்து வாழ்பவன் நான்

3. கிறிஸ்துவுக்குள் நறுமணம் நான்
தெருத் தெருவா மணம் வசுவேன்
மட்புபெறும் அனைவருக்கும் - நான்
வாழ்வளிக்கும் வாசனையாவேன்

4. உலகத்திற்கு வெளிச்சம் நான்
இந்த ஊரெல்லாம் வுழசஉா அடிப்பேன்
உப்பாக பரவிடுவேன் - நான்
எப்போதும் சுவை தருவேன்

5. கர்த்தரின் முத்திரை என் மேல் - நான்
முற்றிலும் அவருக்குச் சொந்தம்
அச்சாரமாய் ஆவியானவர் - நான்
நிச்சயமாய் மட்பு பெறுவேன்

6. தேவனாலே பிறந்தவன் நான்
எந்த பாவமும் செய்வதில்லை
கர்த்தரே பாதுகாக்கிறார்
தயோன் என்னை தண்டுவதில்லை

7. கடவுள் எனக்கு வாக்களித்ததை
நிறைவேற்ற வல்லவரென்று
நிச்சயமாய் நம்பினதாலே - நான்
நம்பிக்கையில் வல்லவனானேன் (வளர்கின்றேன்)



வரவேண்டும் தேவ ஆவியே


வரவேண்டும் தேவ ஆவியே
எங்கள் மத்தியிலே
வரவேண்டும் தேவ ஆவியே
எங்கள் உள்ளத்திலே
ஆட்கொள்ளும் ஐயா
அபிஷேகியும்
அனல் மூட்டும் ஐயா
அனல் மூட்டும்



ராஜாதி ராஜாவைக் கொண்டாடுவோம்


ராஜாதி ராஜாவைக் கொண்டாடுவோம்
நாள் தோறும் துதிபாடி கொண்டாடுவோம் - நம்

1. வந்தாரே தேடி வந்தாரே
தன் ஜவன் எனக்காய் தந்தாரே
என்னை வாழவைக்கும் தெய்வம்தான் இயேசு
என்னை வழிநடத்தும் தபம்தானே இயேசு - அந்த

2. கலக்கம் இல்லே எனக்கு கவலை இல்லே
கர்த்தர் என் மேய்ப்பராய் இருக்கிறார்
என்னை பசும்புல் மேய்ச்சலுக்கு நடத்துவார்
நான் பசியாற உணவு ஊட்டி மகிழுவார் - அந்த

3. வென்றாரே சாத்தானை வென்றாரே
வல்லமைகள் அனைத்தையும் உரித்தாரே
அந்த சாத்தான் மேலே அதிகாரம் தந்தாரே
என் இயேசு நாமம் சொல்லிச் சொல்லி முறியடிப்பேன் - நம்

4. கரங்களிலே என்னை பொறித்து உள்ளார்
கண்முன்னே தினம் என்னை நிறுத்தியுள்ளார்
ஏற்ற காலத்திலே உயர்த்துவார் - அவர்
கரங்களுக்குள் அடங்கி நான் காத்திருப்பேன்

5. முடிவில்லாத தம் மகிமையிலே
பங்கு பெற என்னை தெரிந்துக் கொண்டார்
என்னை சர்படுத்தி ஸ்திரப்படுத்தி நடத்துவார்
பெலப்படுத்தி நிலைநிறுத்தி மகிழுவார்



ராஜா நீர் செய்த நன்மைகள்


ராஜா நீர் செய்த நன்மைகள்
அவை எண்ணி முடியாதையா
ஏறெடுப்பேன் நன்றிபலி
என் ஜுவ நாளெல்லாம - நான்
நன்றி ராஜா இயேசு ராஜா (4)

1. அதிகாலை நேரம் தட்டி தட்டி எழுப்பி
புது கிருபை தந்தரையா
ஆனந்த மழையில் நனைத்து நனைத்து
தினம் நன்றி சொல்ல வைத்தரையா - 2 நன்றி

2. வேதத்தின் இரகசியம் அறிந்திட புரிந்திட
உம் வெளிச்சம் தந்தரையா
பாதம் அமர்ந்து நான் உம் குரல்
கேட்கும் பாக்கியம் தந்தரையா

3. ஒவ்வோரு நாளும் உணவும் உடையும் தந்து
பாதுகாத்து வந்தரையா
உடல் சுகம் தந்து ஒரு குறைவின்றி
வழி நடத்தி வந்தரையா

4. துன்பத்தின் பாதையில் நடந்த அந்நாளில்
துக்கிச் சென்றரையா
அன்பர் உம் கரத்தால் அணைத்து அணைத்து தினம்
அதிசயம் செய்தரையா (ஆறுதல் தந்தரையா)

5. கூப்பிட்ட நாளில் மறுமொழி கொடுத்து
விடுதலை தந்தரையா
குறைகளை நீக்கி கரைகளைப் போக்கி
கூடவே வந்தரையா

6. உமக்காக வாழ உம் நாமம் சொல்ல
தெரிந்து எடுத்தரையா
உம்மோடு வைத்து ஊழியனாக
உருவாக்கி வந்தரையா



யோசனையில் பெரியவரே


யோசனையில் பெரியவரே ஆராதனை ஆராதனை
சேயல்களிலே வல்லவரே ஆராதனை ஆராதனை
ஓசான்னா உன்னத தேவனே
ஓசான்னா ஓசான்னா ஓசான்னா

1. கண்மணி போல் காப்பவரே
கழுகு போல சுமப்பவரே

2. சிலுவையினால் மட்டவரே
சிறகுகளால் மூடுபவரே

3. வழி நடத்தும் விண்மனே
ஒளி வசும் விடிவெள்ளியே

4. தேடி என்னை காண்பவரே
தினந்தோறும் தேற்றுபவரே

5. பரிசுத்தரே படைத்தவரே
பாவங்களை மன்னித்தவரே

6. உறுதியான அடித்தளமே
விலை உயர்ந்த மூலைக் கல்லே



யுத்தம் செய்யப் புறப்படுவோம்


யுத்தம் செய்யப் புறப்படுவோம் - நாம்
யுத்தம் செய்யப் புறப்படுவோம்

1. ஆவியிலே நிரம்்பிடுவோம்
அபிகேம் பெற்றிடுவோம்

2. விசுவாசக் கேடயத்தை
கையிலே ஏந்திடுவோம்

3. இறை வார்த்தை வாளேந்தியே
எதிரியை வென்றிடுவோம்

4. கர்த்தர் நமக்காய் யுத்தம் செய்வார்
கலக்கம் நமக்கு வேண்டாம்

5. எக்காளம் ஊதிடுவோம்
எரிக்கோவைத் தகர்த்திடுவோம்

6. கோலியாத்தை முறியடிப்போம்
இயேசுவின் நாமத்தினால்



யார் வேண்டும் நாதா


யார் வேண்டும் நாதா நீரல்லவோ
எது வேண்டும் நாதா உம் அன்பல்லவோ
பாழாகும் லோகம் வேண்டாமையா
வணான வாழ்க்கை வெறுத்தேனையா

1. உலகத்தின் செல்வம் நிலையாகுமே
பேர் புகழ் கல்வி அழியாததோ
பின் ஏன் நீர் கேட்டீர் இக்கேள்வியை
புதில் என்ன சொல்வேன் நீரே போதும்

2. சிற்றின்ப மோகம் சக்கிரம் போகும்
பேரின்ப நாதா நீர் போதாதா
யார் வேண்டும் என்று ஏன் கேட்டீரோ
எங்கே நான் போவேன் உம்மையல்லால்

3. என்னைத் தள்ளினால் நான் எங்கே போவேன்
அடைக்கலம் ஏது உம்மையல்லால்
கல்வாரி இன்றி கதியில்லையே
கர்த்தர் நின்பாதம் சரணடைந்தேன



யார் என்னைக் கைவிட்டாலும்


யார் என்னைக் கைவிட்டாலும்
இயேசு கைவிடமாட்டார்

1. தாயும் அவரே தந்தையும் அவரே
தாலாட்டுவார் சராட்டுவார்

2. வேதனை துன்பம் நெருக்கும் போதெல்லாம்
வேண்டிடுவேனே காத்திடுவாரே

3. எனக்காகவே மனிதனானார்
எனக்காகவே பாடுபட்டார்

4. இரத்தத்தாலே கழுவிவிட்டாரே
இரட்சிப்பின் சந்தோம் எனக்குத் தந்தாரே

5. ஆவியினாலே அபிகேம் செய்து
அன்பு வசனத்தால நடத்துகின்றாரே

6. எனக்காகவே காயப்பட்டார்
என் நோய்கள் சுமந்து கொண்டார்



யார் பிரிக்க முடியும்


யார் பிரிக்க முடியும்
என் இயேசுவின் அன்பிலிருந்து
எதுதான் பிரிக்க முடியும்
என் நேசரின் அன்பிலிருந்து

1. வேதனையோ நெருக்கடியோ
சோதனையோ பிரித்திடுமோ

2. வியாதிகளோ வியாகுலமோ
கடன் தொல்லையோ பிரித்திடுமோ

3. கவலைகளோ க்டங்களோ
ந்டங்களோ பிரித்திடுமோ

4. பழிச்சொல்லோ பகைமையளோ
பொறாமைகளோ பிரித்திடுமோ

5. சாத்தானோ செய்வினையோ
பில்லி சூனியமோ பிரித்திடுமோ

6. உறவுகளோ உணர்வுகளோ
எதிர்ப்புகளோ பிரித்திடுமோ



மேகமே மகிமையின் மேகமே


மேகமே மகிமையின் மேகமே
இந்த நாளிலே இறங்கி வாருமே
மேகமே மகிமையின் மேகமே
வந்தால் போதுமே எல்லாம் நடக்குமே

1. ஏகமாய் துதிக்கும்போது
இறங்கின மேகமே
ஆலயம் முழுவதும்
மகிமையால் நிரப்புமே

2. வானம் திறக்கணும்
தெய்வம் பேசணும்
நேச மகனென்று (மகளென்று)
நித்தம் சொல்லணும்

3. மறுரூபமாக்கிடும்
மகிமையின் மேகமே
முகங்கள் மாறணுமே
ஒளிமயமாகணுமே

4. வாழ்க்கைப்பயணத்திலே
முன்சென்ற மேகமே
நடக்கும் பாதைதனை
நாள்தோறும் காட்டுமே

5. கையளவு மேகம்தான்
பெருமழை பொழிந்தது
என் தேச எல்லையெங்கும்
பெருமழை (அருள்மழை) வேண்டுமே



முடியாது முடியாது


முடியாது முடியாது
உம்மைப் பிரிந்து எதையும் செய்ய
முடியாது முடியாது - என்னால் (இயேசையா)

1. திராட்சை செடியே உம் கொடி நான்
உம்மோடு இணைந்து உமக்காய் படர்ந்து
உலகெங்கும் கனி தருவேன்

2. மண்ணோடு நான் ஒட்டி உள்ளேன்
உமது வார்த்தையால் இந்நாளில் என்னை
உயிர்ப்பியும் என் தெய்வமே

3. குயவன் நீர் களிமண் நான் - உமது
விருப்பம் போல் வனைந்துக் கொண்டு
உலகெங்கும் பயன்படுத்தும்

4. பெலப்படுத்தும் என் கிறிஸ்துவினால்
எதையும் செய்திட பெலணுண்டு
எல்லாம் நான் செய்திடுவேன்

எல்லாம் நான் செய்திடுவேன்
உம் துணையால் உம் கரத்தால்
எல்லாம் நான் செய்திடுவேன் .. இயேசையா

5. பூமியிலே பரதேசி நான் - உமது
வார்த்தையை ஒருபோதும் எனக்கு
மறைத்து விடாதேயும்

6. உம் வழிகள் கற்றுத்தாரும்
இறுதிவரை நான் பற்றிக் கொண்டு
எந்நாளும் கடைபிடிப்பேன்



முகமலர்ந்து கொடுப்பவரை


முகமலர்ந்து கொடுப்பவரை கர்த்தர் நேசிக்கிறார்
உற்சாக மனதுடனே கொடுத்திடுவோம்

1. வருத்தத்தோடல்ல, கட்டாயத்தாலல்ல
இருப்பதை விருப்பமுடன், கொடுத்திடுவோம்
விதை விதைத்திடுவோம் அறுவடை செய்வோம்

2. அதிகமாய் விதைத்தால், அதிக அறுவடை
ஏழ்மை நிலையிலிருந்து இன்றே விடுதலை
அளவின்றி கொடுத்து, செல்வர்களாவோம்
அமுக்கி குலுக்கி மடியில் அளந்து போடுவார்

3. ஏழைக்கு இரங்கி கொடுக்கும் போதெல்லாம்
கர்த்தருக்கு கடன் கொடுத்து திரும்ப பெற்றிடுவோம்
எந்த நிலையிலும் தேவையானதெல்லாம்
எப்போதும் நமக்கு தந்திடுவாரே

4. நற்செயல் செய்ய வேண்டிய அனைத்தும்
மிகுதியாகவே தந்திடுவாரே
எல்லா நன்மைகளால் நிரப்ப வல்லவர்
குறைகளை நிறைவாக்கி நடத்திடுவார்



மாரநாதா... இயேசு நாதா


மாரநாதா... இயேசு நாதா
சீக்கிரம் வாரும் ஐயா
வாரும் நாதா இயேசு நாதா (2)

1. மன்னவன் உம்மைக் கண்டு மறுரூபம் ஆகணுமே
விண்ணவர் கூட்டத்தோடு எந்நாளும் பாடணுமே

2. குடிவெறி களியாட்டம் அடியோடு அகற்றிவிட்டேன்
சண்டைகள் பொறாமைகள் என்றோ வெறுத்து விட்டேன் - நான்

3. பெருமைபாராட்டுகள் ஒருநாளும் வேண்டாம் ஐயா
சிற்றின்பம் பணமயக்கம் சிறிதளவும் வேண்டாம் ஐயா

4. நியமித்த ஓட்டத்திலே நித்தம் நான் ஓடிடுவேன்
நித்திய கிாடம்தனை நிச்சயமாய்ப் பெற்றுக்கொள்வேன்

5. ஆவியில் நிரம்பிடுவேன் அயராது ஜெபித்திடுவேன்
அப்பாவின் சுவிசேம் எப்போதும் முழங்கிடுவேன்

6. உம்முகம் பார்க்கணுமே உம் அருகில் இருக்கணுமே
உம்பாதம் அமரணுமே உம்குரல் கேட்கணுமே



மலைமேல் ஏறுவோம்


மலைமேல் ஏறுவோம்
மரங்களை வெட்டுவோம்
ஆலயம் கட்டுவோம்
அவர் பணி செய்திடுவோம்

நாடெங்கும் சென்றிடுவோம்
நற்செய்தி சொல்லிடுவோம்
சபைகளை நிரப்பிடுவோம்
சாட்சியாய் வாழ்ந்திடுவோம்

1. தேவனின் வடு பாழாய்க் கிடக்குதே
நாமோ நமக்காய் வாழ்வது நியாயமா - 2
வாழ்வது நியாயமா
நாடெங்கும் சென்றிடுவோம்

2. திரளாய் விதைத்தும் கொஞ்சமாய் அறுப்பதேன்
வருகின்ற பணமெல்லாம் வணாய்ப் போவதேன் - 2
வணாய்ப் போவதேன்
நாடெங்கும் சென்றிடுவோம்

3. மனம் தளராமல் பணியைத் தொடருங்கள்
படைத்தவர் நம்மோடு பயமே வேண்டாம்
பயமே வேண்டாம்
நாடெங்கும் சென்றிடுவோம்

4. தேவன் தந்த ஆரம்ப ஊழியத்தை
அற்பமாய் எண்ணாதே அசட்டை பண்ணாதே
அசட்டை பண்ணாதே
நாடெங்கும் சென்றிடுவோம்

5. ஜனங்கள் விரும்புகின்ற தலைவர் வந்திடுவார்
மகிமையால் நிரப்பிடுவார் மறுரூபமாக்கிடுவார்
மறுரூபமாக்கிடுவார்
மலைமேல் ஏறுவோம்



மரித்த இயேசு உயிர்த்து விட்டார்


மரித்த இயேசு உயிர்த்து விட்டார் அல்லேலுயா
மன்னன் இயேசு ஜவிக்கிறார் அல்லேலுயா
அல்லேலுயா ஜவிக்கிறார் - (2)
அல்லேலுயா அல்லேலுயா ஜவிக்கிறார்

1. மரணம் அவரைத் தடுத்து நிறுத்த முடியவில்லையே
கல்லறையோ கட்டிக்காக்க முடியவில்லையே
யுுதசிங்கம் கிறிஸ்துராஜா வெற்றி பெற்றாரே
சோர்ந்து போன மகனே நீ துள்ளிப் பாடிடு

2. கண்ணரோடு மரியாள் போல அவரைத் தேடுவோம்
கர்த்தர் இயேசு நமக்கும் இன்று காட்சி தருவார்
கனிவோடு பெயர்சொல்லி அழைத்திடுவார்
கலக்கமின்றி காலமெல்லாம் சாட்சி பகர்வோம்

3. எம்மாவுுர் சடரோடு நடந்து சென்றார்
இறைவார்த்தை போதித்து ஆறுதல் தந்தார்
அப்பம்பிட்டு கண்களையே திறந்து வைத்தார்
அந்த இயேசு நம்மோடு நடக்கின்றார்

4. அஞ்சாதே முதலும் முடிவும் இயேசுதானே
இறந்தாலும் எந்நாளும் வாழ்கின்றவர்
நாவினாலே அறிக்கை செய்து மட்படைவோம்
நாள்தோறும் புதபெலனால் நிரம்பிடுவோம்



மரணமே உன் கூர் எங்கே


மரணமே உன் கூர் எங்கே
பாதாளமே உன் ஜெயம் எங்கே? - (2)
மரணத்தை ஜெயித்த மன்னவன் இயேசு எனக்குள் வந்துவிட்டார்
சாவை அழித்து அழியா வாழ்வை எனக்குத் தந்து விட்டார் - 2
மரணமே உன் கூர் எங்கே?

1. சாவுக்கு அதிபதி சாத்தானை - இயேசு
சாவாலே வென்று விட்டார் - 2
மரண பயத்தினால் வாடும் மனிதரை
விடுவித்து மட்டுக் கொண்டார் - 2
பயமில்லையே மரண பயமில்லையே
ஜெயம் எடுத்தர் இயேசு ஜெயம் எடுத்தார்
மரணமே உன் கூர் எங்கே?

2. அழிவுக்கு உரிய இவ்வுடல் - ஒருநாள்
அழியாமை அணிந்து கொள்ளும் - 2
சாவுக்கு உரிய இவ்வுடம் ஒருநார்
சாகாமை அணிந்து கொள்ளும் - 2
பயமில்லையே மரண பயமில்லையே
ஜெயம் எடுத்தர் இயேசு ஜெயம் எடுத்தார்
மரணமே உன் கூர் எங்கே?

3. இறந்தேர் மேலும் வாழ்வோர் மேலும்
ஆளுகை செய்திடவே - 2
இயேசு மரித்து உயிர்த்து எழுந்தார்
இன்றைக்கும் ஜவிக்கிறார் - 2
பயமில்லையே மரண பயமில்லையே
ஜெயம் எடுத்தர் இயேசு ஜெயம் எடுத்தார்
மரணமே உன் கூர் எங்கே?

4. கட்டளை பிறக்க சுதன் குரல் ஒலிக்க
கர்த்தர் இயேசு வந்திடுவார் - 2
கிறிஸ்துவிற்குள் வாழ்வோர் கிறிஸ்துவிற்குள் மரித்தோர்
எதிர் கொண்டு சென்றிடுவோம் - 2
பயமில்லையே மரண பயமில்லையே
ஜெயம் எடுத்தர் இயேசு ஜெயம் எடுத்தார்
மரணமே உன் கூர் எங்கே?



மனம் இரங்கும் தெய்வம் இயேசு


மனம் இரங்கும் தெய்வம் இயேசு
சுகம் தந்து நடத்திச் செல்வார் (2)
யெகோவா ராபா இன்றும் வாழ்கிறார்
சுகம் தரும் தெய்வம் இயேசு இன்று தருகிறார்
மனம் இரங்கும் தெய்வம் இயேசு

1. பேதுரு வட்டிற்குள் நுழைந்தார்
மாமி கரத்தை பிடித்துத் துக்கினார் (2)
காய்ச்சல் உடனே நங்கிற்று
அவள் கர்த்தர் தொண்டு செய்து மகிழ்ந்தாள் (2)
யெகோவா ராபா

2. குஸ்டரோகியைக் கண்டார் இயேசு
கரங்கள் நட்டித் தொட்டார் (2)
சித்தமுண்டு சுத்தமாகு - என்று
சொல்லித் சுகத்தைத் தந்தார்
யெகோவா ராபா

3. நிமிர முடியாத கூனி - அன்று
இயேசு அவளைக் கண்டார் - (2)
கைகள் அவள் மேலே வைத்தார் - உடன்
நிமிர்ந்து குதிக்கச் செய்தார்
யெகோவா ராபா

4. பிறவிக் குருடன் பத்திமேயுு - அன்று
இயேசுவே இரங்கும் என்றான் - (2)
பார்வை அடைந்து மகிழ்ந்தான் - உடன்
இயேசு பின்னே நடந்தான்
யெகோவா ராபா



மனதுருகும் தெய்வமே இயேசைய்யா


மனதுருகும் தெய்வமே இயேசைய்யா
மனதாரத் துதிப்பேன் ஸ்தோத்தரிப்பேன்
நீர் நல்லவர் சர்வ வல்லவர்
உம் இரக்கத்திற்கு முடிவே இல்லை
உம் அன்பிற்கு அளவே இல்லை
அவை காலைதோறும் புதிதாயிருக்கும்

1. மெய்யாக எங்களது
பாடுகளை ஏற்றுக் கொண்டு
துக்கங்களை சுமந்து கொண்டீர் - ஐயா

2. எங்களுக்கு சமாதானம்
உண்டு பண்ணும் தண்டனையோ
உம்மேலே விழுந்ததையா - ஐயா

3. சாபமான முள்முடியை
தலைமேலே சுமந்து கொண்டு
சிலுவையிலே வெற்றி சிறந்தர் - ஐயா

4. எங்களது மறுதலால்
காயப்பட்டீர் நொறுக்கப்பட்டீர்
தழும்புகளால் சுகமானோம் - உந்தன்

5. தேடிவந்த மனிதர்களின்
தேவைகளை அறிந்தவராய்
தினம் தினம் அற்புதம் செய்தர் - ஐயா



மகிழ்ந்து களிகூரு மகனே


மகிழ்ந்து களிகூரு மகனே (மகளே)
பயம் வேண்டாம்
மன்னவன் இயேசு உன் (நம்) நடுவில்
பெரியகாரியம் செய்திடுவார்.

1. தேவையை நினைத்து திகையாதே
தெய்வத்தைப் பார்த்து நன்றி சொல்லு
கொஞ்சத்தைப் கண்டு குழம்பாதே
கொடுப்பார் உண்டு கொண்டாடு

2. அப்பாவின் புகழை நீ பாடு
அதுவே உனக்கு ளுயகந புரயசன
தப்பாமல் மகிழ்ந்து உறவாடு
எப்போதும் வாழ்வாய் சுகத்தோடு

3. மீனின் வயிற்றில் யோனா போல்
கூனிக் குறுகிப் போனாயோ
பலியிடு துதியை சப்தத்தோடு
விலகிடும் எல்லாம் வெட்கத்தோடு

4. நிலையான நகரம் நமக்கில்லை
வரப்போகும் நகரையே நாடுகிறிறோம்
இயேசுவை உயர்த்தும் ஸ்தோத்திரப்பலி
இப்போதும் எப்போதும் செலுத்திடுவோம்

5. துதிக்கும் போது நம் நடுவில்
உட்கார நாற்காலி போடுகிறோம்
துதிகளை அரியணையாக்கிடுவார்
வந்து அமர்ந்து மகிழ்ந்துடுவார்



மகிமையான பரலோகம் இருக்கையிலே


மகிமையான பரலோகம் இருக்கையிலே - நீ
மனம் உடைந்து போவதும் ஏனோ
ஆற்றித் தேற்றி அன்பர் இயேசு இருக்கையிலே - நீ
அஞ்சி அஞ்சி வாழ்வதும் ஏனோ

திடன் கொள் பெலன் கொள்
சோர்ந்திடாமல் தொடர்ந்து ஓடு

மகிமையான பரலோகம் இருப்பதனால்
நான் மனம் உடைந்து போகவே மாட்டேன்
ஆற்றி தேற்ற அன்பர் இயேசு இருப்பதனால்
நான் அஞ்சி அஞ்சி வாழ்ந்திட மாட்டேன்

திடம் கொண்டேன் பெலன் கொண்டேன்
சோர்ந்திடாமல் தொடர்ந்து ஓடுவேன்



மகிமையின் நம்பிக்கையே


மகிமையின் நம்பிக்கையே
மாறிடாத என் இயேசையா
உம்மையல்லோ பற்றிக் கொண்டேன்
உலகத்தில் வெற்றி கொண்டேன்

துதித்து துதித்து மகிழ்ந்து புகழ்ந்து
துயவர் உம்மை நான் பாடுவேன்

1. ஆத்துமாவின் நங்கூரமே
அழிவில்லா பெட்டகமே
நேற்றும் இன்றும் ஜவிக்கின்ற
நிம்மதியின் கன்மைலயே

2. பள்ளத்தாக்கில் நடந்தாலும்
பயமில்லை பாதிப்பில்லை
உம் குரலோ கேட்குதையா
உள்ளமெல்லாம் அன்பால் பொங்குதையா

3. நல் மேப்பவரே நம்பிக்கையே
நானும் உந்தன் ஆட்டுக்குட்டி
உம்மைத் தானே பின் தொடர்ந்தேன்
உம் தோளில்தான் நானிருப்பேன்

4. பிரகாசிப்பின் பேரொளியே
விடிவெள்ளி நட்சத்திரமே
உம் வசனம் ஏந்திக் கொண்டு
உலகெங்கும் சுடர்விடுவேன்



மகிமையடையும் இயேசு ராஜனே


மகிமையடையும் இயேசு ராஜனே
மாறாத நல்ல மேய்ப்பனே
உந்தன் திருநாமம் வாழ்க
உலகெங்கும் உம் அரசு வருக - வருக

1. உலகமெல்லாம் மீட்படைய
உம் ஜவன் தந்தரையா

2. பாவமெல்லாம் கழுவிடவே
உம் இரத்தம் சிந்தினரே

3. சாபமெல்லாம் போக்கிடவே
முள்முடி தாங்கினரே

4. என் பாடுகள் ஏற்றுக் கொண்டீர்
என் துக்கம் சுமந்தரையா

5. கசையடிகள் எனக்காக
காயங்கள் எனக்காக

6. நோய்களெல்லாம் நக்கிடவே
காயங்கள் பட்டீரையா



போராடும் என் நெஞ்சமே


போராடும் என் நெஞ்சமே
புகலிடம் மறந்தாயோ
பாராளும் இயேசு உண்டு
பதறாதே மனமே

1. அலைகடல் நடுவினிலே
அமிழ்ந்து போகின்றாயோ
கரம் நட்டும் இயேசுவைப் பார்
கரை சேர்க்கும் துணை அவரே..
ஆ... ஆனந்தம் பேரானந்தம்
என் அருள்நாதர் சமூகத்திலே (2) - போராடும்

2. கடந்ததை நினைத்து தினம்
கண்ணர் வடிக்கின்றாயோ
நடந்ததெல்லாம் நன்மைக்கே
நன்றி நன்றி சொல்லு
ஆ...ஆனந்தம் பேரானந்தம்
என் அருள்நாதர் சமூகத்திலே (2) - போராடும்

3. வருங்கால பயங்களெல்லாம்
வாட்டுதோ அனுதினமும்
அருள்நாதர் இயேசுவிடம்
அனைத்தையும் கொடுத்துவிடு
ஆ... ஆனந்தம் பேரானந்தம்
என் அருள்நாதர் சமூகத்திலே (2) - போராடும்

4. நண்பன் கைவிட்டானோ
நம்பினோர் எதிர்த்தனரோ
கைவிடா நம் தேவனின்
கரம் பற்றி நடத்திடு
ஆ... ஆனந்தம் பேரானந்தம்
என் அருள்நாதர் சமூகத்திலே (2) - போராடும்



மகிமை உமக்கன்றோ


மகிமை உமக்கன்றோ
மாட்சிமை உமக்கன்றோ
துதியும் புகழும் ஸ்தோத்திரமும்
துயவர் உமக்கன்றோ

ஆராதனை - ஆராதனை - என்
ஆன்பர் இயேசுவுக்கே

1. விலையேறப் பெற்ற உம் இரத்தத்தால்
விடுதலை கொடுத்தர்
இராஜாக்களாக லேவியராக
உமக்கென தெரிந்து கொண்டீர்

2. விழிகாட்டும் தபம் துணையாளரே
தேற்றும் தெய்வமே
அன்பால் பெலத்தால்
அனல்மூட்டும் ஐயா அபிகே நாதரே

3. எப்போதும் இருக்கின்ற
இனிமேலும் வருகின்ற எங்கள் ராஜாவே
உம் நாமம் வாழ்க உம் அரசு வருக
உம் சித்தம் நிறைவேறுக

4. உம் வல்ல செயல்கள்
மிகவும் பெரிய அதிசயமன்றோ
உம் துய வழிகள் நேர்மையான
சத்திய தபமன்றோ



போதுமானவரே புதுமையானவரே


போதுமானவரே புதுமையானவரே
பாதுகாப்பவரே என் பாவம் தர்த்தவரே
ஆராதனை (2) ஆயுளெல்லாம் ஆராதனை

1. எனக்காக தண்டிக்கப்பட்டீரே
அதனால் நான் மன்னிக்கப்பட்டேன்
எனக்காக காயப்பட்டீரே
அதனால் நான் சுகம் பெற்றுக் கொண்டேன்
- ஆராதனை
2. பாவங்கள் சுமந்ததனால் - நான்
நதிமானாய் மாற்றப்பட்டேன்
மரணத்தை ஏற்றுக் கொண்டதால் - நித்திய
ஜவனை பெற்றுக் கொண்டேன் ஐயா

3. எனக்காக புறக்கணிக்கப்பட்டீர்
அதனால் நான் ஏற்றுக் கொள்ளப்பட்டேன்
எனக்காக அவமானமடைந்து - உம்
மகிமையிலே பங்குபெறச் செய்தர்

4. சிலுவையிலே ஏழ்மையானதால் - என்னை
செல்வந்தனாய் மாற்றிவிட்டீரே - நீர்
சாபங்களை சுமந்து கொண்டதால் - நான்
ஆசிர்வாதம் பெற்றுக் கொண்டேன்



பெராக்காவில் கூடுவோம்


பெராக்காவில் கூடுவோம்
கர்த்தர் நல்வர் - என்று
பாடுவோம் பாடுவோம்

1. எதிரியை முறியடித்தார் பாடுவோம்
இதுவரை உதவி செய்தார் பாடுவோம்

2. நமக்காய் யுத்தம் செய்தார் பாடுவோம்
நாளெல்லாம் பாதுகாத்தார் பாடுவோம்

3. இளைப்பாறுதல் தந்தார் பாடுவோம்
இதயம் மகிழச் செய்தார் பாடுவோம்

4. சமாதானம் தந்தாரே பாடுவோம்
சந்தோம் தந்தாரே பாடுவோம்

5. யெகோவா மெக்காதஸ் ஸ்தோத்திரம்
பரிசுத்தம் தருகிறர் ஸ்தோத்திரம்

6. யெகோவா ஸிட்கேனு ஸ்தோத்திரம்
எங்கள் நதியே ஸ்தோத்திரம்

7. யெகோவா ஒசேனு ஸ்தோத்திரம்
உருவாக்கும் தெய்வமே ஸ்தோத்திரம்



பூமியின் குடிகளே வாருங்கள்


பூமியின் குடிகளே வாருங்கள்
கர்த்தரை கெம்பீரமாய் பாடுங்கள்

1. மகிழ்வுடனே கர்த்தருக்கு
ஆராதனை செய்யுங்கள்
ஆனந்த சப்தத்தோடே
திருமுன் வாருங்கள் - அவர்

2. கர்த்தரே நம் தேவனென்று
என்றும் அறிந்திடுங்கள்
அவரே நம்மை உண்டாக்கினார்
அவரின் ஆடுகள் நாம்

3. துதியோடும் புகழ்ச்சியோடும்
வாசலில் நுழையுங்கள்
அவர் நாமம் துதித்திடுங்கள்
ஸ்தோத்திர பலியிடுங்கள்

4. நம் கர்த்தரோ நல்லவரே
கிருபை உள்ளவரே
அவர் வசனம் தலைமுறைக்கும்
தலைமுறைக்கும் உள்ளது



புதிய வாழ்வு தரும் புனித ஆவியே


புதிய வாழ்வு தரும் புனித ஆவியே
பரிசுத்த தெய்வமே பரலோக தீபமே

1. இருள் நிறைந்த உலகத்திலே
வெளிச்சமாய் வாருமையா
பாவ இருள் நீக்கி பரிசுத்தமாக்கும்
பரமனே வாருமையா

வரவேண்டும் வல்லவரே
வரவேண்டும் நல்லவரே
வரவேண்டும் வரவேண்டும்

2. தடைகள் நீக்கும் தயாபரரே
உடையாய் வாருமையா
ஒடுங்கிப் போன எங்கள் ஆவியை விரட்டி
உற்சாகம் தாருமையா

3. எண்ணெய் அபிகேம் எங்கள் மேலே
நிரம்பி வழியணுமே
மண்ணான உடலை வெறுத்து வெறுத்து என்றும்
பண்பாடி மகிழணுமே

4. உலகம் எங்கிலும் சுவைத்தரும் வெண்ணிற
உப்பாய் மாறணுமே
இலைகள் உதிராமல் கனிகள் தந்திடும்
மரமாய் வளரணுமே

5. துயரம் நீக்கி ஆறுதல் அளிக்கும்
துயவர் வரவேணுமே
புலம்பல் மாற்றி மகிழ்ச்சியுுட்டும்
புனிதரே வரவேணுமே



புகழ்கின்றோம் உம்மையே புகழ்கின்றோம்


புகழ்கின்றோம் உம்மையே புகழ்கின்றோம்
போற்றிப் புகழ்ந்து பாடுகின்றோம்
உயர்த்துகிறோம் உன்னதரே உயர்த்தி மகிழ்கின்றோம்
புகழ்கின்றோம் புண்ணியரே புகழ்ந்து பாடுகின்றோம்
உம்மைப் புகழ்ந்து பாடுகின்றோம்
உயர்த்தி மகிழ்கின்றோம் (2)

1. நுற்றுவத் தலைவனை தேற்றினரே
வார்த்தையை அனுப்பி வாழ வைத்தர்
விசுவாசம் பெரிதென்று பாராட்டினர்
விண்ணக விருந்தில் இடம் கொடுத்தர்

2. கல்லறை லேகியோனை தேடிச் சென்றர்
ஆறாயிரம் பேய்களை ஓடச் செய்தர்
ஆடை அணிந்து அமரச் செய்தர்
ஆர்வமாய் சாட்சி பகரச் செய்தர்

3. பெதஸ்தா குளத்து முடவனையே
படுக்கை எடுத்து நடக்கச் செய்தர்
இனியும் பாவம் செய்யாதே என்று
எச்சரித்தரே தேடிச் சென்று

4. தோல்வியில் துவண்ட பேதுருவின்
படகில் ஏறி போதித்தரே
படகு நிறைய மன்கள் தந்தர்
பாவநிலையை உணர வாத்தர்

5. மரத்தில் அமர்ந்த சகேயுவை
மனகிரங்கி நோக்கினரே
இறங்கி வாரும் என்று அழைத்து
இரட்சிப்பு தந்து மகிழச் செய்தர்

6. பர்த்திமேயு குருடனை பார்த்தரே
பரிசுத்தர் உம்மையே பார்க்க வைத்தர்
உந்தன் பின்னே நடக்க வைத்தர்
உம்மை போற்றி புகழச்செய்தர்

7. மரித்த லாசருவின் கல்லறை முன்
மனதுருகி நீர் கண்ணர் விட்டீர்
நம்பினால் அதிசயம் என்று சொல்லி
நாற்றத்தை மாற்றி நடக்க வைத்தீர்



பிதாவே ஆராதிக்கின்றோம்


பிதாவே ஆராதிக்கின்றோம்
இயேசுவே ஆர்ப்பரிக்கின்றோம்
ஆவியானவரே அன்பு செய்கின்றோம்

ஆராதிக்கின்றோம்
ஆர்ப்பரிக்கின்றோம்
அன்பு செய்கின்றோம் - உம்மை

1. மகனாக தெரிந்து கொண்டீர்
மறுபடி பிறக்க வைத்தர்
ராஜாக்களும் நாங்களே
ஆசாரியாகளும் நாங்களே

2. சகலமும் படைத்தவரே
சர்வ வல்லவரே
மகிமைக்கு பாத்திரரே
மங்காத பிரகாசமே

3. ஸ்தோத்திரமும் கனமும்
வல்லமையும் பெலனும்
மாட்சிமையும் துதியும்
எப்போதும் உண்டாகட்டும்

4. பரிசுத்தர் பரிசுத்தர்
பரலோக ராஜாவே
எப்போதும் இருப்பவரே
இனிமேலும் வருபவரே

5. உமது செயல்களெல்லாம்
அதிசயமானவைகள்
உமது வழிகளெல்லாம்
சத்தியமானவைகள்



பாடுவோம் மகிழ்வோம்


பாடுவோம் மகிழ்வோம்
கொண்டாடுவோம்
அப்பா சமூகத்தில் பாடி
மகிழ்ந்து கொண்டாடுவோம்

1. அக்கினி மதில் நீரே
ஆறுதல் மழை நீரே
இக்கட்டில் துணை நீரே
இருளில் வெளிச்சம் நீரே - நன்றி

2. துயர் நீக்கும் மருத்துவரே
என் துதிக்குப் பாத்திரரே
பெலனெல்லாம் நீர்தானையா
என் பிரியமும் நீர்தானையா

3. கல்வாரி சிலுவையினால் - என்
சாபங்கள் உடைந்ததையா
ஆபிரகாமின் ஆசீர்வாதங்கள் - இந்த
அடிமைக்கு கிடைத்ததையா

4. இயேசுவே உம் இரத்தத்தால்
என்னை நீதிமானாய் மாற்றினீரே
பரிசுத்த ஆவி தந்து - உம்
அன்பை ஊற்றினீரே

5. உம்மையே நம்பி வாழ்வதால்
உமக்கே சொந்தமானேன் - என்
உயிரான கிறிஸ்து வந்தால் - உம்
உறவுக்குள் வந்துவிட்டேன்

6. இவ்வுலகப் போக்கின்படி
நான் வாழ்ந்தேன் பலநாட்கள்
உம்மோடு இணைத்தீய்யா - உம்
மிகுந்து இரக்கத்தினால்

7. வாழ்வு தரும் ஊற்று நீரே
வழிகாட்டும் தபம் நீரே
புயலில் புகலிடமே - கடும்
வெயிலில் குளிர் நிழலே

8. பேரின்ப நரோடையில்
என் தாகம் தணிப்பவரே
உமது பேரன்பு - அது
எத்தனை மேலானது



பள்ளங்களெல்லாம் நிரம்பிட வேண்டும்


பள்ளங்களெல்லாம் நிரம்பிட வேண்டும்
மலைகள் குன்றுகள் தகர்ந்திட வேண்டும்
கோணலானவை நேராகணும்
கரடானவை சமமாகணும்
ராஜா வருகிறார் ஆயத்தமாவோம் (2)
இயேசு வருகிறார் எதிர் கொண்டு செல்வோம்

1. நல்ல கனிகொடா மரங்களெல்லாம்
வெட்டுண்டு அக்கினியில் போடப்படும்

2. கோதுமையைப் பிரித்து களஞ்சியத்தில் சேர்த்து
பதரையோ அக்கினியில் சுட்டெரிப்பாரே

3. அந்நாளில் வானம் வெந்து அழியும்
புுமியெல்லாம் எரிந்து உருகிப் போகும்

4. கரையில்லாமலே குற்றமில்லாமலே
கர்த்தருக்காய் வாழ்ந்து முன்னேறுவோம்

5. அநுதினமும் ஜெபத்தில் விழித்திருப்போம்
அபிகே எண்ணெய்யால் நிரம்பிடுவோம்



பரிசுத்த ஆவியே பக்தர்கள் துணையாளரே


பரிசுத்த ஆவியே பக்தர்கள் துணையாளரே
கூட இருப்பவரே குறைகள் தீர்ப்பவரே

1. தேற்றிடும் தெய்வமே
திடம் தருபவரே
ஊற்றுத் தண்ணரே
உள்ளத்தின் ஆறதலே - எங்கள்

2. பயங்கள் நக்கிவிட்டீர்
பாவங்கள் போக்கிவிட்டீர்
ஜெயமே உம் வரவால்
ஜெபமே உம் தயவால் - தினம்

3. அபிகே நாதரே
அச்சாரமானவரே
மட்பின் நாளுக்கென்று
முத்திரையானவரே - எங்கள்

4. விடுதலை தருபவரே
விண்ணப்பம் செய்பவரே
சாட்சியாய் நிறுத்துகிறர்
சத்தியம் போதிக்கிறர் - தினம்

5. அயல்மொழி பேசுகிறோம்
அதிசயம் காண்கிறோம்
வரங்கள் பெறுகிறோம்
வளமாய் வாழ்கிறோம்

6. சத்துரு வரும் போது
எதிராய் கொடி பிடிப்பர்
எக்காளம் ஊதுகிறோம்
எதிரியை வென்று விட்டோம்



பயப்பட மாட்டேன் நான் பயப்பட மாட்டேன்


பயப்பட மாட்டேன் நான் பயப்பட மாட்டேன்
இயேசு என்னோடு இருப்பதனால்
ஏலேலோ ஐலசா

1. உதவி செய்கிறார் பெலன் தருகிறார்
ஒவ்வொரு நாளும் கூட வருகிறார்

2. காற்று வசட்டும் கடல் பொங்கட்டும்
எனது நங்கூரம் இயேசு இருக்கிறார்

3. வலைகள் வசுவோம் மன்களைப் பிடிப்போம்
ஆத்துமாக்களை அறுவடை செய்வோம்

4. பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே
எல்லாவற்றையும் செய்ய பெலன் உண்டு

5. பரம அழைத்தலின் பந்தய பொருளுக்காய்
இலக்கை நோக்கி நாம் படகை ஓட்டுவோம்

6. உலகில் இருக்கிற அலகையைவிட
என்னில் இருப்பவர் மிகவும் பெரியவர்



எந்தன் இயேசு கைவிடமாட்டார்


எந்தன் இயேசு கைவிடமாட்டார்
என்னை மறந்திட மாட்டார்
அல்லேலுயா - 8

1. நிந்தனை போராட்டத்தில்
நேசர் எனைத் தாங்கினார்
சோதனை வந்த போதெல்லாம்
தப்பிச் செல்ல வழி காட்டினார்

2. கடந்ததை மறக்கின்றேன்
கண் முன்னால் என் இயேசுதான்
காத்திருந்து பெலன் அடைந்து
கழுகைப் போல் எழும்பிடுவேன்

3. சீக்கிரம் வரப்போகின்ற
நேசருக்காய் காத்திருப்பேன்
எரியும் விளக்கேந்தியே
இயேசுவின் பின் செல்லுவேன்

4. ஆயிரம் துன்பம் வந்தாலும்
அச்சம் எனக்கில்லையே
அரணும் கோட்டையும் அவர்
அத்தனையும் தகர்த்திடுவாரே



நெருக்கடி வேளையில் பதில் அளித்து


நெருக்கடி வேளையில் பதில் அளித்து
பாதுகாத்து நடத்திடுவார்
என்னோடு இருந்து ஆதரித்து
தினமும் உதவிடுவார்

1. ந செலுத்தும் காணிக்கைகள் நினைவு கூர்ந்திடுவார் - 2
நன்றிப்பலி அனைத்தையுமே பிரியமாய் ஏற்றுக் கொள்வார் - 2
பிரியமாய் ஏற்றுக் கொள்வார்
நெருக்கடி வேளையில் பதில் அளித்து

2. உன்மனம் விரும்புவதை உனக்குத் தந்திடுவார் - 2
உனது திட்டங்களெல்லாம் நிறைவேற்றி முடித்திடுவார் - 2
நிறைவேற்றி முடித்திடுவார்
நெருக்கடி வேளையில் பதில் அளித்து

3. உனக்குவரும் வெற்றிபைக்கண்டு மகிழ்ச்சியில் ஆர்ப்பரிப்போம் -2
நம்தேவன் நாமத்திலே வெற்றிக் கொடி நாட்டிடுவோம்
வெற்றிக் கொடி நாட்டிடுவோம்
நெருக்கடி வேளையில் பதில் அளித்து

4. இரதங்களை நம்பும் மனிதர் இடறி விழுந்தார்கள் - 2
தேவனை நம்பும் நாமோ நிமிர்ந்து நின்றிடுவோம்
நிமிர்ந்து நின்றிடுவோம்
நெருக்கடி வேளையில் பதில் அளித்து



நேசரே உம்திரு பாதம் அமர்ந்தேன்


நேசரே உம்திரு பாதம் அமர்ந்தேன்
நிம்மதி நிம்மதியே
ஆர்வமுடனே பாடித்துதிப்பேன்
ஆனந்தம் ஆனந்தமே
அடைக்கலமே அதிசயமே
ஆராதனை ஆராதனை

1. உம்வல்ல செயல்கள்
நினைத்து நினைத்து
உள்ளமே பொங்குதையா
நல்லவரே நன்மை செய்தவரே
நன்றி நன்றி ஐயா
வல்லவரே நல்லவரே
ஆராதனை ஆராதனை

2. பலியான செம்மறி
பாவங்கள் எல்லாம்
சுமந்து தர்த்தவரே
பரிசுத்த இரத்தம் எனக்காக அல்லோ
பாக்கியம் பாக்கியமே
பரிசுத்தரே படைத்தவரே
ஆராதனை ஆராதனை

3. எத்தனை இன்னல்கள்
என் வாழ்வில் வந்தாலும்
உம்மைப் பிரியேன் ஐயா
இரத்தமே சிந்தி சாட்சியாய் வாழ்வோன்
நிச்சயம் நிச்சயம்
இரட்சகரே இயேசு நாதா
ஆராதனை ஆராதனை



நேசிக்கிறேன் உம்மைத்தானே ஐயா


நேசிக்கிறேன் உம்மைத்தானே ஐயா
நிலையில்லாத இந்த உலகத்திலே
நேசிக்கிறேன் உம்மைத்தானே ஐயா
உம்மைத்தானே இயேசையா

1. ஒவ்வொரு நாளும் எனது கண் முன்
உம்மைத்தான் நிறுத்தியுள்ளேன்
வலப்பக்கத்தில் இருப்பதனால் - என்
அசைக்கப்படுவதில்லை - நான்

2. உம்மை அல்லாமல் வேறே விருப்பம்
உள்ளத்தில் இல்லையே
நிம்மதியே நிரந்தரமே - என்
நினைவெல்லாம் ஆள்பவரே

3. ஐயா உம் தாகம் எனது ஏக்கம்
அடிமை நான் கதறுகிறேன்
என் ஜனங்கள் அறியணுமே
இரட்சகர் உம்மைத் தேடணுமே

4. உமது வேதம் எனது மகிழ்ச்சி
ஓய்வின்றி தியானிக்கின்றேன்
ஆற்றங்கரை மரமாக
அயராமல் கனி கொடுப்பேன்



நிரப்புங்கப்பா நிரப்புங்கப்பா என்


நிரப்புங்கப்பா நிரப்புங்கப்பா என்
பாத்திரத்தை தண்ணரால் நிரப்புங்கப்பா
நிரப்புங்கப்பா நிரப்புங்கப்பா உம்
பரிசுத்த ஆவியால் நிரப்புங்கப்பா

1. இரவெல்லாம் கண்விழித்து ஜெபிக்கணும்
எதை நினைத்தும் கலங்காம் துதிக்கணும்

2. ஆறாக பெருக்கெடுத்து ஓடணும்
ஆயிரங்கள் உம்மண்டை நடத்தணும்

3. துய வாழ்வு தினம் வாழணும்
தாய்நாடு உம்பாதம் திரும்பணும் - என்

4. அப்பா உம் ஏக்கங்கள் அறியணும்
தப்பாமல் உம் வழியில் நடக்கணும்

5. பாவங்கள் சாபங்கள் நக்கணும்
பரிசுத்த வாழ்க்கை இன்று வாழணும்



நினைவு கூறும் தெய்வமே நன்றி


நினைவு கூறும் தெய்வமே நன்றி
நிம்மதி தருபவரே நன்றி
நன்றி இயேசு ராஜா

1. நோவாவை நினைவு கூர்ந்ததால்
பெருங்காற்று வசச் செய்தரே - அன்று
தண்ணர் வற்றியதைய்யா
விடுதலையும் வந்ததைய்யா

2. ஆபிரகாமை நினைவு கூர்ந்ததால்
லோத்துவை காப்பாற்றினரே
எங்களையும் நினைவு கூர்ந்து
எங்கள் சொந்தங்களை இரட்சியுமைய்யா

3. அன்னாளை நிவைவு கூர்ந்ததால்
ஆண் குழந்தை பெற்றெடுத்தாளே
மலட்டு வாழ்க்கையெல்லாம்
மாற்றுகிறர் நன்றி ஐயா - எங்கள்

4. கொர்நெலியு தான தர்மங்கள் - ஒரு
துதனைக் கொண்டு வந்தது
குடும்பத்தையும் நண்பர்களையும்
இரட்சித்து அபிகேித்தரே - அவன்

5. ராகேலை நினைவு கூர்ந்ததால்
யோசேப்பை பரிசாய் தந்தரே
இன்னுமொரு மகனைத் தருவர்
என்று சொல்லி துதிக்கச் செய்தரே

6. எக்காளம் ஊதும் போதெல்லாம்
எங்களை நினைக்கின்றர்
எதிரிகளின் கையிலிருந்து
இரட்சித்து காப்பாற்றுகிறர்



நாளைய தினத்தைக் குறித்து பயமில்லை


நாளைய தினத்தைக் குறித்து பயமில்லை
நாதன் இயேசு எல்லாம் பார்த்துக் கொள்வார்

1. ஆண்டவர் எனது வெளிச்சமும் மட்புமானார்
எதற்கும் பயப்படேன்
அவரே எனது வாழ்வின் பெலனானார்
யாருக்கும் அஞ்சிடேன் - அல்லேலுயா

2. கேடுவரும் நாளில் கூடார மறைவினிலே
ஓளித்து வைத்திடுவார்
கன்மலையின் மேல் உயர்த்தி நிறுத்திடுவார்
கலக்கம் எனக்கில்லை - அல்லேலுயா

3. தகப்பனும் தாயும் என்னை கைவிட்டாலும்
கர்த்தர் சேர்த்துக் கொள்வார்
கர்த்தருக்காய் நான் தினமும் காத்திருப்பேன்
புதுபெலன் பெற்றிடுவேன் - அல்லேலுயா

4. கர்த்தரிடத்தில் ஒன்றை நான் கேட்பேன்
அதையே நாடுவேன்
வாழ்நாளெல்லாம் அவரின் பிரசன்னத்தில்
வல்லமை பெற்றிடுவேன் - அல்லேலுயா

5. சிங்கக்குட்டிகள் பட்டினி கிடந்தாலும்
எனக்கோ குறையில்லை
குறைகளையெல்லாம் நிறைவாக்கித் தந்திடுவார்
கொஞ்சமும் பயமில்லை - அல்லேலுயா



நான் உன்னை விட்டு விலகுவதில்லை


நான் உன்னை விட்டு விலகுவதில்லை
நான் உன்னை என்றும் கைவிடுவதில்லை - (2)
நான் உன்னைக் காண்கின்ற தேவன்
கண்மணி போல் உன்னைக் காப்பேன் - (2)

1. பயப்படாதே ந மனமே - நான்
காத்திடுவேன் உன்னை தினமே
அற்புதங்கள் நான் செய்திடுவேன்
உன்னை அதிசயமாய் நான் நடத்திடுவேன்

2. திகையாதே கலங்காதே மனமே - நான்
உன்னுடனிருக்க பயமேன்
கண்ணர் யாவையும் துடைத்திடுவேன் - உன்
கலலைகள் யாவையும் போக்கிடுவேன்

3. அனுதினம் என்னைத் தேடிடுவாய் - நான்
அளித்திடும் பெலனைப் பெற்றிடுவாய்
அத்திமரம் போல் செழித்திடுவாய் நான்
ஆசையாய் உண்ண கனி கொடுப்பாய்

4. நதியின் வலக்கரத்தாலே உன்னை
தாங்குவேன் நான் அன்பினாலே
ஆவியின் உண்மையாய் ஜெபித்திடுவாய்
தினம் அல்லேலுயா என்றே ஆர்ப்பரிப்பாய்



நான் உனக்கு போதித்து நடக்கும் பாதையை


நான் உனக்கு போதித்து நடக்கும் பாதையை
நாள் தோறும் காட்டுவேன் பயப்படாதே
(காத்திரு மகனே)

உன்மேல் என் கண் வைத்து
ஆலோசனை சொல்லுவேன்
அறிவுரை நான் கூறுவேன் - உனக்கு

1. ஈசாக்கு விதை விதைத்து
நுறுமடங்கு அறுவடை செய்தான்
உன்னையும் ஆசிர்வதிப்பேன் - அது போல

2. ஏசேக்கு சித்னா
இன்றோடு முடிந்தது மகனே (மகளே)
ரெகோபோத் தொடங்கி விட்டது - உனக்கு

3. தேசத்தில் பலுகும்படி
உனக்கு இடம் உண்டாக்கினேன்
ரெகோபோத் உனக்கு உண்டு .. இது முதல்

4. கர்த்தர் நிச்சயமாய்
உன்னோடு இருக்கிறார் என்று
அநேகர் அறிந்து கொள்வார்கள் .. இது முதல்
(அறிக்கை செய்வார்கள்)

5. கலங்காதே நான்
உன்னோடு இருக்கின்றேன் மகனே
பலுகிப் பெருகிடுவாய் - தேசத்தில்

6. உனக்கு எதிரானோர்
உன் சார்பில் வருவார்கள்
சமாதானம் செய்வார்கள் - உன்னோடு



நல்ல சமாரியன் இயேசு


நல்ல சமாரியன் இயேசு
என்னைத் தேடி வந்தாரே

1. என்னைக் கண்டாரே
அணைத்துக் கொண்டாரே

2. அருகில் வந்தாரே
மனது உருகினாரே

3. இரசத்தை வார்த்தாரே
இரட்சிப்பைத் தந்தாரே

4. எண்ணெய் வார்த்தாரே
அபிகேம் செய்தாரே

5. காயம் கட்டினாரே
தோள்மேல் சுமந்தாரே

6. சபையில் சேர்த்தாரே
வசனத்தால் காப்பாரே

7. மண்டும் வருவாரே
அழைத்துச் செல்வாரே



நாதா உம் திருக்கரத்தில் இசைக் கருவி நான்


நாதா உம் திருக்கரத்தில் இசைக் கருவி நான்
நாள்தோறும் பயன்படுத்தும் உந்தன் சித்தம் போல்

1. ஐயா உம் பாதம் என் தஞ்சமே
அனுதினம் ஓடி வந்தேன்
ஆனந்தமே அதிசயமே - (2)
- நாதா

2. எங்்ேக நான் போக உம் சித்தமோ
அங்கே நான் சென்றிடுவேன்
உம் நாமத்தில் ஜெயம் எடுப்பேன் - நான்

3. புதுப்பாடல் தந்து ஆசர்வதியும்
பரவசமாகிடுவேன்
எக்காளம் நான் ஊதிடுவேன்

4. நிந்தைகள் நெருக்கம் துன்பங்களில்
துதி பாடி மகிழ்ந்திருப்பேன்
கிருபை ஒன்றே போதுமைய்யா

5. ஊரெல்லாம் செல்வேன் பறை சாற்றுவேன்
உம் நாமம் உயர்த்திடுவேன்
சாத்தான் கோட்டை தகர்த்திடுவேன்



நான் இயேசுவின் பிள்ளை


நான் இயேசுவின் பிள்ளை
பயமே இல்லை
எந்நாளும் சந்தோஷமே

1. தெரிந்து கொண்டார் தெரிந்து கொண்டார்
மகனாக மகளாக தெரிந்து கொண்டார்

2. கழுவப்பட்டேன் கழுவப்பட்டேன்
இயேசுவின் இரத்தத்தாலே கழுவப்பட்டேன்

3. வென்று விட்டேன் வென்று விட்டேன்
எதிரியின் தடைகளை வென்று விட்டேன்

4. நிரப்பப்பட்டேன் நிரப்பப்பட்டேன்
ஆவியின் வல்லமையால் நிரப்பப்பட்டேன்

5. சுகமானேன் சுகமானேன்
இயேசுவின் காயங்களால் சுகமானேன்

6. முறியடிப்பேன் முறியடிப்பேன்
எதிரான ஆயுதத்தை முறியடிப்பேன்